கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமிருந்த காணிகளில் 150.15 ஏக்கர் காணி நாளை வெள்ளிக்கிழமை  விடுவிக்கப்படவுள்ளன. 

படையினர் வசமிருந்து விடுவிப்பதற்காக அடையாளம் காணப்பட்ட மக்களின் காணிகளே இவ்வாறு நாளை அரசாங்க அதிபர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

நாளை காலை குறித்த காணிகள் படையினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாகக் கிளிநொச்சி இராணுவ தலைமையகம் தெரிவிக்கின்றது.

படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பது தொடர்பில் பல்வேறு கூட்டங்கள் இடம்பெற்றன. இந்த நிலையில் அண்மையில் ஒரு பகுதி காணிகள் விடுவிக்கப்பட்டபோது, மேலும் சில காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவை விடுவிக்கப்பட ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகக் கிளிநொச்சி இராணுவ தலைமை கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய தெரிவித்திருந்தார்.


நாளை கிளிநொச்சியில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ள இராணுவ தளபதி, குறித்த காணிகள் விடுவிப்பது தொடர்பான ஆவணங்களைக் கையளிப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.