பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினை இருபதுக்கு - 20 தொடரில் 3:0 என்ற கணக்கில் தோற்கடித்த வேகத்துடன் இலங்கை அணியானது அடுத்தவாரம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணியானது அவுஸ்திரேலிய அணியுடன் 3 இருபதுக்கு - 20 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் இடம்பெறவுள்ள இத் தொடரானது இரு அணிகளுக்கும் ஒத்திகை பார்ப்பதற்கான வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

அவுஸ்திரேலிய அணியை ஆரேன் பிஞ்ச் வழிநடத்தவுள்ள நிலையில் இலங்கை அணியை லசித் மலிங்க வழி நடத்துகிறார். அத்துடன் சிரேஷ்ட வீரர்களான நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோரும், பாகிஸ்தான் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பானுக்க ராஜபக்ஷ, தனுஷ்க குணதிலக்க, ஓசாத பெர்னாண்டோ, அவிஷ்க பெர்னாண்டோ, செஹான் ஜெசூரிய, வனிந்து ஹசரங்க மற்றும் இசுறு உதான போன்ற வீரர்களும் அணியில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1st T20I, at Adelaide, Oct 27 2019

2nd T20I, (N) at Brisbane, Oct 30 2019

3rd T20I, (N) at Melbourne, Nov 1 2019