சஜித்துக்கு எவ்வித சிக்கலும் இன்றி 10 வருடங்களுக்கு சிறப்பான சேவையாற்ற முடியும் - ஹர்ஷன

Published By: R. Kalaichelvan

17 Oct, 2019 | 04:18 PM
image

(நா.தனுஜா)

சஜித் பிரேமதாஸ நாட்டை முன்நோக்கிக் கொண்டுசெல்லக்கூடிய ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் அதற்கு அவசியமான இளமையையும் கொண்ருக்கிறார்.

எவ்வித சிக்கல்களுமின்றி எதிர்வரும் 10 வருடகாலத்திற்கு அவரால் நாட்டிற்கு சிறப்பான சேவையை ஆற்றமுடியும். எனவே இளைஞர்கள் தமது பிரதிநிதியைத் தெரிவுசெய்யும் போது நீங்கள் நன்கு சிந்தித்துத் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதித் தேர்தலை முன்நிறுத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய இளைஞரணியின் தலைவரும், கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா வலியுறுத்தினார்.

இரத்தினபுரியில் இன்று புதிய ஜனநாயக முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞரணி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

ஐக்கிய தேசியக் கட்சியுடன் எவ்வித தொடர்புமில்லாத பல்வேறு இளைஞர் அமைப்புக்கள் கூட சஜித் பிரேமதாஸவே இந்நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றன.

அதேபோன்று நாம் அமைத்திருக்கும் தேசிய இளைஞரணி ஜனாதிபதித் தேர்தலை மாத்திரம் மையப்படுத்தியதல்ல என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இந்த நாட்டின் இளைஞர், யுவதிகள் அனைவரையும் கருத்திற்கொண்டு நாம் ஒரு கொள்கையை உருவாக்குகின்றோம். 

அதனை எதிர்வரும் 28 ஆம் திகதி சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள தேசிய இளைஞர் மாநாட்டில் வைத்து சஜித் பிரேமதாஸவிடம் கையளிப்பதுடன், அதுகுறித்து மாநாட்டில் கலந்துகொள்ளும் இளைஞர், யுவதிகள் அவருடன் கலந்துரையாட முடியும். அதனூடாக இறுதிப்படுத்தப்பட்ட இளைஞர் கொள்கையை நாட்டின் சட்டமாக்குவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம்.

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் சஜித் பிரேமதாஸவிற்கு 52 வயதே என்றபோதும் அரசியலில் 20 வருடகாலம் பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியிருக்கிறார்.

 அதுமாத்திரமன்றி பிரதி அமைச்சு மற்றும் அமைச்சுப் பதவிகளையும் வகித்திருப்பதால் பெரும் அனுபவ அறிவைக் கொண்டிருக்கிறார். அவர் நாட்டை முன்நோக்கிக் கொண்டுசெல்லக்கூடிய ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் அதற்கு அவசியமான இளமையையும் கொண்ருக்கிறார் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08