சஜித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கையின் பலதரப்பட்ட வாகன சாரதிகள் சங்கங்கள்..!

Published By: J.G.Stephan

17 Oct, 2019 | 03:53 PM
image

(நா.தனுஜா)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதற்கும், அவரை வெற்றிபெறச் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கும் இலங்கையின் பலதரப்பட்ட வாகன சாரதிகள் சங்கங்கள் முன்வந்திருக்கின்றன.

கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயம் தொடர்பில் தெளிபடுத்தப்பட்டமையும் குறிப்பிடதக்கது.

மேலும் இச்சந்திப்பில், இலங்கைப் போக்குவரத்துச் சபை, ஒன்றிணைந்த தனியார் பஸ் சேவை சங்கம், லொறி சாரதிகள் சங்கம், இலங்கை சுயதொழிலாளர் - முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதகள் கலந்துகொண்டதுடன், அவர்கள் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

அத்தோடு இலங்கைப் போக்குவரத்துச் சபையின் ஊழியர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு விவகாரம், ஓய்வுபெற்ற பின்னரும் போக்குவரத்துச் சபையினால் வழங்கப்பட்ட வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரத்தை வைத்திருப்பதற்கான அனுமதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சஜித் பிரேமதாஸவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும், அப்பிரச்சினைகளுக்குத் தீர்வைப்பெற்றுத் தருவதாக அவர் உறுதியளித்திருப்பதால் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை வெற்றிபெறச் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவிருப்பதாக போக்குவரத்துச்சபையின் பிரதிநிதி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55