முல்லைத்தீவு உடையார் கட்டு இருட்டு மடுப்பகுதியில் வெங்காய வெடியில் சிக்கிப் பாதிக்கப்பட்ட காட்டுயானை ஒன்று இன்று 17.10.19 அதிகாலை மக்களின் விவசாய நிலத்திற்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றது.

இருட்டுமடு கிராமத்திற்குள் இன்று அதிகாலை சென்ற குறித்த யானை பல இடங்களுக்கு சென்றுவிட்டு பாலகுமார் என்பவரின் வீட்டுத் தோட்ட காணிக்குள் புகுந்துள்ளது. 

வாயில் வெங்காய வெடியில் சிக்கிப் பாதிக்கப்பட்ட காட்டுயானையாகக் காணப்படுகின்ற போதும் குறித்த காணிக்குள் நின்று மக்களை விரட்டி அச்சுறுத்தும் நடவடிக்கையில் யானை ஈடுபட்டுள்ளது.

வெடிகொழுத்தி  யானையினை காட்டுக்குள் அனுப்பும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டுள்ளார்கள் யானையின் பாதிப்பு குறித்துச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்தும் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.