குருநாகல் - கண்டி  பிரதான வீதியில் பாதையை கடக்க முற்பட்ட வயோதிபப் பெண்ணொருவர் முச்சக்கர வண்டியில் மோதி உயிரிழந்துள்ளார். இவ் விபத்து நேற்று இடம்பெற்றதாக மாவத்தகம பொலிசார் தெரிவித்தனர்.

மாவத்தகம பகுதியை சேர்ந்த 80 வயதுடைய வயோதிப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த வயோதிப பெண் மாவத்தகம வைத்திய சாலையில் அனுமதிக்கபட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி சாரதியை மாவத்தகம பொலிசார் கைது செய்து விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.