உலகின் அதி­வேக ஓட்­ட வீர­ரான ஜமைக்­காவின் உசைன் போல்ட், செக் குடி­ய­ர சில் நடை­பெற்ற ‘கோல்டன் ஸ்பைக்’ தொடரில் 100 மீட்டர் ஓட்­டப்­பந்­தய போட்­டியில் பந்­தய தூரத்தை 9.98 வினா­டி­களில் கடந்து முத­லிடம் பெற்றார்.

9.98 வினா­டி­களில் பந்­தய தூரத்தை கடந்­தது குறித்து உசைன் போல்ட் கூறு­கையில் ‘‘எனக்கு இந்த ஓட்­டத்தில் முழு திருப்­தி­யில்லை. 9.8 வினா­டி­களில் பந்­தய தூரத்தை கடக்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால், முதல் பாதி தூரத்­திற்­கான ஓட்­டத்தில் தோல்­வி­ய­டைந்­து­விட்டேன். முதல் 40 மீட்டர் எனக்கு மந்தமாக அமைந்து விட்டது என்றார்.