இன்று தனது  27 ஆவது  பிறந்தநாளை கொண்டாடும் நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் பரிசாக அவரின் 24 ஆவது படத்தின்  “பர்ஸ்ட் லுக்“ ஐயும்  பெயரையும் வெளியிட்டிருக்கிறது படக்குழு. 

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், மற்றும் அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷின்  24 ஆவது படமாக  ‘பெண்குயின்’  உருவாகிவருகின்றது.  இப் படத்தின்  “பர்ஸ்ட் லுக்“ ஐயும் பெயரையும்  கீர்த்தி சுரேஷின்  ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக படக்குழு இன்று (17-10-2019) வெளியிட்டுள்ளது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள  ‘பெண்குயின்’  படத்தின்  “பர்ஸ்ட் லுக்“ ரசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 “பர்ஸ்ட் லுக்“ இல், கீர்த்திசுரேஷ் கர்ப்பிணி பெண்ணாக காட்சியளிப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது என்றும், மீண்டும் விருது பெறுவதற்கான படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்றும் இணையத்தில் அவரது ரசிகர்கள் பதிவிட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் நடிகை மேனகாவின் வாரிசாக கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் . தன்னுடைய கடின உழைப்பால் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக வளம் வருகின்றார்.

இவர் ‘நடிகையர் திலகம்’ என்ற படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றவர். இதன் மூலும் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 25 படங்கள் நடிப்பதற்குள் தேசிய விருது பெற்ற நடிகை என்ற புகழையும் தனதாக்கிக்கொண்டார்.