(நா.தினுஷா) 

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரையில் சுதந்திரமானதும் நீதியானதும் தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெப்ரல்) அமைப்பில் 60 க்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. 

இவற்றில் அரச சொத்துக்கள் மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பில் அதிகளவான முறைபாடுகள் கிடைக்பெற்றுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. 

இந்த தடவை ஜனாதிபதி தேர்தலை சுதந்திரமானதும் நீதியானதுமாக நடத்தி முடிப்பதற்கான விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளதாகவும் 6000 க்கு அதிகமான தேர்தல் கண்காணிப்பாளர்களை சேவையில் ஈடுப்படுத்தவுள்ளதாகவும் பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.