(இராஜதுரை ஹஷான்)

யுத்த வெற்றியை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையாளர் குறிப்பிடுவதன் பின்னணி என்ன எனக் கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனிருத்த, அது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கூறினார்.

முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில்  பாதுகாப்பு செயலாளராக கோத்தபய ராஜபக்ஷ  நியமிக்கப்பட்டார். அவரது  வழிநடத்தலின் பெயரிலே யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.  யுத்தத்தை வெற்றிக் கொண்டவரையே  பொதுஜன பெரமுன  ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியுள்ளது.

ஆகவே தேர்தல் பிரச்சாரத்தின் போது அந்த விடயங்களையே முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.