நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள இரு பிரதான தனியார் பாடசாலைகளில் கொத்து ரொட்டி உட்கொண்ட 18 மாணவர்கள், அது நஞ்சாகியதால் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

குறித்த இரு தனியார் பாடசாலைகளின் உணவகங்கள் இரண்டும், தனி நபர் ஒருவரினாலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. இரு பாடசாலை மாணவர்களுக்கும் தேவையான கொத்து ரொட்டி, இந்த இரு பாடசாலைகளில் ஒன்றில் இயங்கிவந்த உணவகம் ஒன்றிலேயே சமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சமைக்கப்பட்ட கொத்து ரொட்டி அடுத்த பாடசாலை உணவகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு சமைக்கப்பட்ட கொத்து ரொட்டியை, இரு பாடசாலை மாணவர்களும் உட்கொண்டதால் அது விஷமாகிய நிலையிலேயே குறித்த 18 மாண வர்களும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 இது தொடர்பிலான விசாரணைகளை, நீர்கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார வைத்தியப் பரிசோதகர் குழு தற்பொழுது மேற்கொண்டு வருகிறது.

அத்துடன், குறித்த கொத்து ரொட்டியின் மாதிரிகளும், பரிசோதனை நடவடிக்கைகளுக்காக அரச வைத்திய பகுப்பாய்வு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.