அம்பலாங்கொடை, கன்டேகொட பகுதியில் 12.160 கிலோகிராம் கழிவுத் தேயிலைத் தூள்களுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இலங்கை தேயிலை சபை அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

3.750 கிலோ கிராம் கழிவுத் தேயிலைத் தூளுடன் இருவரும், 8.410 கிலோ கிராம் தேயிலைத் தூளுடன் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் கிராண்ட்பாஸ் மற்றும் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 52 மற்றும் 27 வயதுடையவர்கள் ஆவர்.