சூதாட்டச் சர்ச்சையில் சிக்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணித் தலைவர் உட்பட 3 வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாவுள்ள சர்வதேச இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றுப் போட்டிகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

இதில் 14 அணிகள் பங்கேற்கின்றன. அதில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி, சூதாட்டச் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அணியின் தலைவர் மொஹட் நவீத், ஷாய்மன் அன்வர், கதீர் அஹமட் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டின் பேரிலே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர்.