இங்­கி­லாந்­துக்கு அணிக்­கெ­தி­ரான முத­லா­வது டெஸ்ட் போட்­டியில் விளை­யா­டிய இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 88 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது.

இங்­கி­லாந்­திற்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள இலங்கை அணி அந்­நாட்டு அணி­யுடன் 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை­யா­டி­ வ­ரு­கி­றது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 19ஆம் திகதி லீட்ஸில் ஆரம்­ப­மா­னது.

இந்தப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இங்­கி­லாந்து அணி தனது முதல் இன்­னிங்ஸில் 298 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது. இதில் இலங்கை அணியின் பந்­து­வீச்­சா­ள­ரான தசுன் சானக்க அபா­ர­மாக பந்து வீசி இங்­கி­லாந்து அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­களை வீழ்த்­தினார்.

அதைத் தொடர்ந்து தனது முதல் இன்­னிங்ஸை விளை­யா­டிய இலங்கை அணி 91 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து ஏமாற்­றி­யது.

அது­மட்­டு­மன்றி இன்னும் 9 ஓட்­டங்கள் பெற்­றி­ருந்தால் பலோ ஓன் ஆவதைத் தவிர்த்­தி­ருக்­கலாம். ஆனாலும் அந்த 9 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்குள் 3 விக்­கெட்­டுக்­களை அடுத்­த­டுத்து இழந்து பலோ ஓன் ஆனது இலங்கை.

இந்த நிலையில் 207 ஓட்டங்கள் பின்­தங்­கிய நிலை யில் 3ஆவது நாளில் தொடர்ந்து துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை அணி இரண்­டா­வது இன்­னிங்ஸில் 119 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது.

நேற்­று­முன்­தினம் இரண்டு முறை மழை குறுக்­கிட்­டதால் போட்டி இடை நடுவே நிறுத்­தப்­பட்­டது.

இரண்­டா­வது இன்­னிங்ஸில் சற்று ஆறுதல் அளித்த குசல் மெண்டிஸ் 53 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்டார். அவரைத் தவிர திரி­மான்ன 16 ஓட்­டங்­க­ளையும், கௌஷால் சில்வா 14 ஓட்­டங்­க­ளை யும் பெற்­றுக்­கொண்­டனர்.

ஏனைய வீரர்­க­ளான கரு­ணா­ரத்ன(7), சந்­திமால்(8), மெத்­தியூஸ்(5), தசுன் சானக்க(4), ஹேரத் (4), சமீர (0), எரங்க(2), பிரதீப் (0) என சொற்ப ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்­தனர்.

பந்­து­வீச்சில் மிரட்­டிய இங்­கி­லாந்து அணியின் முன்­னணி பந்­து­வீச்­சா­ள­ரான அண்­டர்சன் மொத்தம் 10 விக்­கெட்­டுக்­களை வீழ்த்தி அசத்­தினார். முதல் இன்­னிங்ஸில் 5 விக்­கெட்­டு­களை அள்­ளிய இங்­கி­லாந்து வேகப்­பந்து வீச்­சாளர் ஜேம்ஸ் அண்­டர்சன் 2ஆவது இன்­னிங்­ஸிலும் 5 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினார்.

தோல்வி குறித்து கருத்து தெரி­வித்த இலங்கை அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ், இங்­கி­லாந்து அணியின் வேகப்­பந்து வீச்சுக்கு முகம்­கொ­டுக்க முடியா­மல்­போ­ன­துதான் எமது தோல்­விக்கு காரணம். துடுப்பாட்ட வீரர்கள் இன்னும் சிறப்பாக செயற்­பட்­டி­ருக்க வேண்டும். அடுத்த போட்­டியில் குறை­களை நிவர்த்­தி ­செய்­து ­கொண்டு சிறந்த போட்­டியை வழங்­குவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1–-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.