ஐந்து கட்சிகளின் ஒற்றுமை என்பது மக்களை ஏமாற்றும் செயல்.  அத்துடன் சிவாஜிலிங்கம் பொது வேட்பாளராவதற்கு சகல தகுதிகளும் உள்ளன என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.வவுனியாவில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயற்குழுவை சந்தித்ததன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,


ஐந்து கட்சிகளின் செயற்பாடு ஒரு பொய்யானதாகவே தெரிகிறது. இருப்பதை இல்லாமல் செய்யும் வேலையையே இந்தக் கட்சிகள் செய்யப்போகின்றன. இருப்பதை பாதுகாத்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். அதுவே எமது கொள்கை. எனினும் இம்முறை மக்கள் ஏமாறமாட்டார்கள் என நான் நம்புகிறேன். 


தமிழ்க் கட்சிகள் அல்லது கூட்ட­மைப்பினர் இன்றைய ஆட்சியை உருவாக்குவதற்காக எவ்வளவோ உசுப்பேத்தல்களை மக்களிடத்தில் சொன்னார்கள். ஆனால் இன்று மக்கள் அதிலிருந்து விடுபட்டு அவர்களின் சின்னச் சின்ன தேவைகளுக்குக் கூட வீதியில் இறங்கி போராடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் அப்படியல்ல. எதை சொல்கிறோமோ அதைச் செய்பவர்கள். 


இராணுவ நடவடிக்கை வடக்கை நோக்கி  மேற்கொள்ளப்பட்ட போது தமிழ் மக்கள் பேரழிவை சந்திக்கப் போகின்றார்கள். எனவே நாம் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொள்வோம். நானும் அதில் கலந்து கொள்கின்றேன் என்று தமிழ் கூட்டமைப்பினரிடம் தெரிவித்தேன். அவர்கள் ஆம் என்று கூறிவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. ஏனெனில் அவர்கள் யுத்தம் நடப்பதை  விரும்பியிருந்தார்கள் போல் தெரிகிறது. 

எனவே கூட்ட மைப்பு இன்றைய அரசிற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு மக்களின் பல்வேறு பிரச்சி னைகளை தீர்க்காமல் இருக்கிறது. அரசியல் உரிமை, அன்றாட பிரச்சினை, அபி விருத்தி  இந்த  மூன்றிற்குள்ளும் தான் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சகல விதமான பிரச்சினைகளும் அடங்கி இருக்கின்றன. அதனையே நாம் முன் வைத்திருக்கிறோம்.  அவற்றைச் செய் வோம். செய்விப்போம்.


தென்னிலங்கையில் இருக்கும் கட்சியுடன் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தி அந்த வெற்றியில் பங்கெ டுப்பதன் ஊடாக அதனை மக்களின் வெற்றியாக மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போது தான் மக்கள் வெற்றியாளர்களாக மாறுவார்கள். இதுவே தமிழ்க் கட்சிகளிடத்தில் எனது எதிர்பார்ப்பாக இருக்கிறது. 
தென்னிலங்கையிலே கோத்தபாய வெல்வதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் காணப்படுகின்றன. அந்த வெற்றியில் பங்களித்து அதனை மக்களுடைய வெற்றியாக மாற்றிக் கொள்ளுங்கள்.


சிவாஜிலிங்கம் தேர்தலில் வெல்லப் போவதல்ல. அது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால்  பொது வேட்பாளராக தமிழர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழ்க் கட்சிகள் விரும்பினால் அதற்கு சிவாஜிலிங்கம் பொருத்தமானவர். அதற்கான தகுதிகள் அவருக்கு இருக்கின்றன. எனினும் அவர் போட்டியிடுவதால் மக்களுக்கு எந்தப் பயனும் கிடையாது.


பலாலி விமான நிலையத்தில் வெளி மாவட்டத்தவர்கள் பதவிக்கு அமர்த் தப்­­­­படுவதற்கு முழுக்காரணமும் கூட்ட மைப்பினரே. நாம் ஆட்சியில் இருக்கும் பொழுது  அவ்வாறான செயற்பாடுகளுக்கு இடம் கொடுக்கவில்லை என்றார்.