தெஹிவளை பகுதியில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் தெஹிவளை மிருகக் காட்சிச் சாலையின் ஊழியர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 600 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களிடமிருந்து 2 மில்லியன் ரூபா பெறுமதியான பணம், சொகுசு வாகனம், வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.

தெஹிவளை கவுடான மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளில் நேற்றிரவு விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டபோதே 4 பேர் கைதுசெய்யப்பட்டதுடன்  போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.