வீடு, சொத்து, சுகம், பிறப்­புச்­சான்­றிதழ் என அனைத்­தையும் இழந்து நடு வீதியில் அக­தி­க­ளாக நிற்­கிறோம். நாங்க கன­வுல கூட நினைக்­கல இப்­படி ஒரு துய­ரத்தை அனு­ப­விப்போம் என்று. கடந்த ஆறு நாட்­க­ளாக ஒரே உடுப்­போட இருக்­கிறோம். சில பொருட்­களை வெளிப்­ப­டை­யாக வாய் திறந்து கேட்க முடி­யாத துர்ப்­பாக்­கிய நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்ளோம். கூலித்தொழில் செய்து கஷ்­டப்­பட்டு குருவி போன்று கொஞ்சம் கொஞ்­ச­மாக சேர்த்து வைத்த அனைத்தும் இன்று இல்­லாமல் போய்­விட்­டது என வெள்ளத்தால் பாதிக்­கப்­பட்டு வீதி­க­ளிலும் விகா­ரை­க­ளிலும் முகாம்­க­ளிலும் தங்­கி­யி­ருக்கும் மக்கள் கண்ணீர் மல்க தெரி­வித்­தனர். நாட்டில் கடந்த சில நாட்­க­ளாக ஏற்­பட்ட சீரற்­ற­கால நிலை கார­ண­மாக இது­வரை 84 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 3 இலட்­சத்து 40 ஆயி­ரத்து 150 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இதில் குறிப்­பாக கொழும்பில் மாத்­திரம் ஒரு இலட்­சத்து 47 ஆயி­ரத்து 666 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் 5 பேர் பலி­யா­கி­யுள்­ளனர். பாதிக்­கப்­பட்ட மக்கள் கொழும்பின் பிர­தான வீதி­களின் இரு­ம­ருங்­கிலும் விகா­ரை­க­ளிலும் பாட­சா­லை­க­ளிலும் என 84 இடங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர். கொழும்பில் நிலவி வந்த சீரற்ற கால­நிலை கடந்த மூன்று நாட்­களில் வழ­மைக்கு திரும்­பி­யுள்ள போதும் மக்­களின் வடுக்கள் இன்­னமும் மாற­வில்லை. வீடுகள் இன்­னமும் 6 அடி நீர்­மட்­டத்­துக்குள் மூழ்­கி­யுள்­ளன.

வீடு, சொத்து, சுகம் என அனைத்­தையும் இழந்த இம் மக்கள் இன்று நடு வீதிக்கு தள்­ளி­வி­டப்­பட்­டுள்­ள­னர். இந்த இயற்கை அனர்த்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் குறை­களை கேட்­ட­றி­வ­தற்­காக நாம், கொலன்­னாவ மீதொட்­டு­முல்ல, சேதவத்த, வெல்­லம்­பிட்­டி, லன்­சி­வத்த, பெரண்­டியா வத்த, நவகம்­புர மற்றும் களனி உள்­ளிட்ட கொழும்பின் பல பகு­தி­க­ளுக்கு விஜயம் செய்­தி­ருந்தோம். களனி கங்­கையின் நீர்­மட்டம் படிப்­ப­டி­யாக குறை­வ­டைந்­துள்­ளது. கடந்த இரு நாட்­க­ளாக கொழும்பில் கடு­மை­யான வெயில் காணப்­ப­டு­கின்­றது. எனினும் வெள்ளநீரால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் இன்­னமும் 6 அடிக்­குமேல் தண்ணீர் நிற்­ப­தோடு குறித்தப் பகு­தி­களில் கழிவு நீர் கலந்து கரு­நி­றத்­துடன் காணப்­ப­டு­வ­தோடு கடு­மை­யான துர்­நாற்­றமும் வீசு­கின்­றது.

பாதிக்­கப்­பட்ட மக்கள் கருத்து தெரி­விக்­கையில்,

என்­னு­டைய பெயர் நியாஸ். மீதொட்­டு­முல்ல பகு­தியில் சுமார் பல்­லா­யிரக்கணக்­கான மக்கள் இருக்­கின்றோம். கடந்த சில நாட்­களாக பெய்த மழை எங்­க­ளுக்கு பெரிய பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­விட்­டது. இது­வ­ரையில் அர­சாங்­கத்­துல இருந்து வந்து எங்­க­ளுக்கு எந்­த­வொரு உத­வியும் செய்­யல. உணவு கிடைப்­ப­துல எந்த பிரச்­சி­னையும் இல்ல. எங்­கட பெண்கள் எல்லாம் இன்று வீதிக்கு தள்­ளப்­பட்டு இருக்­காங்க. எங்­கட பெண்கள் ரொம்ப கஷ்­டத்தை எதிர்­கொள்­ளு­றாங்க. நாங்க எப்­ப­டியும் இருந்­துட்டு போயி­ருவோம். ஆனால் இந்த பெண்கள் படும் துயரத்தை வார்த்­தை­யால சொல்ல முடி­யாது. எங்­கட வீடு மட்டும் இல்ல பிறப்புச் சான்­றிதழ் விவாகப் பத்­திரம் பொருட்கள் என அனைத்தும் இல்­லாமல் போய்­விட்­டன. தண்­ணீ­ரால சேத­மான எங்­கட வீடுகள் மீள திருத்தி அமைக்க அர­சாங்கம் உதவி செய்ய வேண்டும். நாங்க எதிர்­பார்க்­கல இப்­படி எல்­லாத்­தையும் இழப்போம் என்று. இந்த வான்­க­த­வு­கள திறக்­கப்­போ­றாங்­கனு முன்­னாடி சொல்­லி­யி­ருந்தா உடுத்த உடுப்­பு­கள சரி எடுத்­து­கிட்டு வெளியாகி இருப்போம். ஆனால் போட்ட உடுப்­போட இன்­னமும் இருக்­கிறோம். இது ஒரு அனர்த்தம். நாங்கள் யார் மீதும் குற்றம் சுமத்த விருப்பம் இல்ல. இருந்­தாலும் அர­சாங்கம் எங்­க­ளுக்கு பதில் ஒன்ற சொல்ல வேண்டும் என கவ­லை­யுடன் தெரி­வித்தார்.

சரீபா என்ற பெண் கருத்து தெரி­விக்­கையில். சுமார் 25 வரு­டங்­க­ளுக்கு மேலாக நான் இங்கு இருக்­கின்றேன். இது­வ­ரைக்கும் இந்­த­மா­திரி ஒரு நிலைமை எங்­க­ளுக்கு ஏற்­பட்­டது இல்ல. நான் ஆப்பம் சுட்டு கொஞ்சம் கொஞ்­ச­மாக சேர்த்து வைத்­த பணத்­துல தான் இந்த வீட்ட கட்டி பொருட்­கள வாங்­குனேன். ஆனால் இன்­றைக்கு எல்லாம் ஒன்றும் இல்­லாம போயி­ருச்சு என்று கண்­க­லங்­கு­கின்றார்..! என்­னால கூட கதைக்க முடி­யல. அர­சாங்கம் தான் எங்­க­ளுக்கு நல்ல தீர்வை பெற்­று­த­ரனும்.

காந்தி என்ற சிங்­கள பெண்­மணி கருத்து தெரி­விக்­கையில், நான் பஸ் டிப்­போ­வுக்கு பக்­கத்­துல தான் இருக்­கின்றேன். எனது வீடு முற்­றாக நீரில் மூழ்­கி­யிருச்சு. பொருட்கள் எல்­லாமே இல்­லாமல் போய்­விட்­டது என தழுதழுத்த குரலில் கதைக்க ஆரம்­பித்த அவர் தன்னை அறி­யா­மலே அழு­கிறார். கண்­ணீரை துடைத்­து­கொண்டு மீண்டும் கதைக்க ஆரம்­பிக்­கின்றார்.

தண்ணீர் கறுப்பு நிற­மாக இருக்­கின்­றது. பக்­கத்­துல இருக்க இந்த குப்பை கொட்டும் இடத்­துல இருந்து வந்த தண்­ணீர்தான் எங்­கட வீட்­டுக்­குள்ள இருக்கு. பொருட்­களை எல்லாம் மீள எடுக்க முடி­யாது. சரி­யான துர்­நாற்றம் அடிக்­கின்­றது. அந்த கிரு­மி­நா­சி­னிகள் நிறைந்த வீட்­டுக்­குள்ள போய் எவ்­வாறு தங்க முடியும். கொஞ்சம் கொஞ்­ச­மாக சேர்த்த எல்­லாமே அழிந்து போய் விட்­டது. நாங்க தேங்காய் துரு­வியில் இருந்து எல்­லாமே புதி­தாக எடுக்க வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலைக்கு தள்­ளப்­பட்டு இருக்­கிறோம்.

வசந்தி சந்­தி­யானி ஜெய­வர்­தன என்ற பெண் கருத்து தெரி­விக்­கையில், பாய், படுக்கை என எல்லாம் இழந்து விட்டோம். இப்­போது சாப்­பி­டு­வ­தற்கு ஒரு பீங்கான் கூட எங்­க­ளிடம் இல்லை. எங்­க­ளது குறைய தீர்க்க யார் வரு­வார்கள் என்று எதிர்­பார்த்து இருக்­கின்றோம். நான் நோயாளி. இந்த தண்­ணீர பார்க்கும் போது உங்­க­ளுக்கு தெரி­கி­றது எவ்­வ­ளவு துர்­நாற்றம் அடிக்­கின்­றது என்று. இத­னால எங்­க­ளுக்கு நோய் தான் அதி­க­ரிக்­கின்­றது. எங்­க­ளுக்கு சாப்­பாடு மூன்று நேரமும் கிடைக்­கி­ன்­றது. ஆனால் படுப்­ப­தற்கு பாய், தலை­யணை மற்றும் மருந்து பொருட்கள் தான் கூடு­த­லாக தேவைப்­ப­டு­கின்­றது. நாங்க இப்ப நடு வீதில நிற்­கிறோம். எங்­க­ளால தொழி­லுக்கும் செல்ல முடி­யாமல் உள்­ளது. எங்­க­ளு­டைய வாழ்க்­கையே கேள்­விக்­கு­றி­யா­கி­விட்­டது என நொந்­து­கொள்­கிறார்.

சேதவத்தை பகு­தியைச் சேர்ந்த விம­ல­சேன கருத்து தெரிவிக்கையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக கொண்டு வரப்­படும் நிவா­ரண பொருட்­களை இடை­ந­டுவே மறித்து பாதிக்­கப்­ப­டாத நபர் எடுத்து செல்­கி­றார்கள். இது தொடர்பில் நகர சபை அவ­தானம் செலுத்த வேண்டும் என்­கிறார்.

சரிபா என்ற பெண் கூறுகையில் தண்ணீர் வழிந்­தோ­டிய பின்னர் எங்­கட வீட்டை கழு­வுவ­தற்கு டெட்டோல், சவர்க்­காரம் இது­ போன்றவற்­றையும் தந்து உதவ வேண்டும். இந்த தண்­ணீர்ல நிறைய கிரு­மிகள் இருக்­கின்­றன என்­கிறார்.

தண்­ணீரால் நிறைந்­தி­ருக்கும் தனது வீட்டை பார்த்­த­வாறு இருந்த ரசேனி வின்­துனி என்ற பாட­சாலை மாணவி கூறும் போது, நான் தரம் 7இல் கல்­வி­கற்­கிறேன். எங்க வீடு முற்­றாக நீர்ல மூழ்­கி­விட்­டது. எனது பாட­சாலை புத்­தகம், சப்­பாத்து என எல்­லாமே ஒன்றும் இல்­லாமல் போய்­விட்­டது. நான் இப்ப பாட­சா­லைக்கு போக­கூட வழி­யில்­லாமல் இருக்­கின்றேன். இந்த துய­ரத்­துல இருந்து எப்ப மீளப்­போ­கின்றோம் என்று எங்­க­ளுக்கு தெரி­யல என்றார்.

மிகவும் பரி­தாப நிலையில் காணப்­பட்ட சுவர்னா என்ற வயோ­திப பெண் தனக்கு ஏற்­பட்ட நிலை­மையை விளக்கும் போது நான் தூங்­கி­கொண்­டி­ருந்த போது விடி­யற்­காலை 3 மணி­யி­ருக்கும். திடீ­ரென காலில் தண்ணீர் படு­வது போல இருந்­தது. உடனே எழும்பி பார்த்த போது வீட்­டுக்குள் வெள்ளம். நான் ஒரு சத்­தி­ர­சி­கிச்சை செய்­யப்­பட்ட நோயாளி. எனக்கு காலிலும் வருத்தம் உள்­ளது. என்னால் எனது பொருட்­களை பாது­காக்க முடி­யாமல் போய்­­விட்­டது. நான் எல்­லா­வற்­றையும் இழந்து விட்டேன். இன்று நடுவீதியில் உடுத்த உடை­யின்றி அநா­தை­யாக நிற்­கிறேன். எனது காலில் உள்ள வருத்தம் மேலும் கூடி­யுள்­ளது. என்னால் இந்த துய­ரத்தை தாங்­கி­க்கொள்ள முடி­யாமல் இருக்­கின்­றது என கூறி­ய­வாறு அழுதார். கன்­னத்தில் கையை வைத்­து­கொண்டு ஆழ்ந்த யோச­னையில் இருந்த ஜரீ­னாவை நாம் அணு­கிய போது, கண்ணீர் சிந்­து­கின்றார். அழுத வண்ணம் இதற்கு முன்னர் இவ்­வாறு ஒரு மழை பெய்­தது இல்ல. இப்­படி ஒரு வெள்ளம் ஏற்­படும் என நாங்க கன­வு­லையும் நினைக்­கல. மீதொட்­டு­முல்ல பகு­தியில் 20 வரு­டத்­துக்கு மேல இருக்­கிறேன். இப்­படி ஒரு வெள்ளம் வீடு­க­ளுக்­குள்ள வந்­ததே இல்ல. இப்ப ஆறு நாட்கள் ஆகின்றது. வீட்­டுல இருந்து வெளியே­றிய போது உடுத்­தி­ருந்த உடுப்­போட தான் இன்­னமும் இருக்­கின்றோம். அழு­கின்றார்...! எங்­க­ளுக்கு சாப்­பாடு கிடைக்­குது. சில பொருட்­கள எங்­க­ளாள வெளிப்­ப­டை­யாக கேட்க முடி­யாது. ஏன் என்றால் பெண்கள் வெட்கப் படு­வார்கள். இவை­கள வாயால கேட்­டு­கொள்ள முடி­யாது. என்ன செய்­வது என அழு­து­கொண்டே தனது பேச்சை நிறுத்­தினார். தண்ணீர் வழிந்­தோ­டிய பின்னர் தனது வீட்டை கழு­விக்­கொண்­டி­ருந்த நபர் ஒருவர் கருத்து தெரி­விக்­கையில், தண்­ணீ­ரால மூழ்கிய எங்­கட வீட இப்­பதான் கழு­வி­கிட்டு இருக்­கின்றோம். வீட்­டுக்­குள்ள ஒரே நாற்றம். சுமார் நான்கு மணித்­தி­யா­ல­மாக கழு­வி­கிட்டு இருக்­கிறோம். ஆனாலும் நாற்றம் போகல. வீட்­டுக்­குள்ள அட்டை மற்றும் சில கிரு­மி­கள் இருந்­தன. இதை சுத்­தப்­ப­டுத்த முடி­யாமல் உள்­ளது என்றார்.

தண்ணீர் நிறைந்து காணப்­பட்ட ஒரு பகு­தியில் அங்கு இங்கும் ஏதோ ஒன்றை தொலைத்­தவர் போல தேடிக்­கொண்­டி­ருந்த வயோ­திப பெண் ஒரு­வரை நாம் அணுகி எதனை தேடு­கின்­றீர்கள் என கேட்ட போது, நான் எனது கோழி­களை தேடி­கொண்­டிருக்­கின்றேன். செல்லப் பிரா­ணிகள் போல இரண்டு கோழியையும் சேவல் ஒன்றையும் வளர்த்தேன். இவைகள் எனது உயிர். கழுத்­த­ளவு தண்ணீர் இருந்த போதும் கோழி இரண்­டையும் தூக்­கி­கொண்டு வந்து விட்டேன். ஆனால் எனது சேவலை காண­வில்லை. எனது உசுரு மாதிரி அந்த சேவல். இப்ப எங்க இருக்கோ தெரி­யல என்­கிறார் 60 வய­து­டைய அய்சா. வெள்ளத்தால் பாதிக்­கப்­பட்டு அப­ய­சிங்­க­ராம விகா­ரையில் தங்­கி­யி­ருக்கும் கொலன்­னாவ நாக­முல்ல பகு­தியைச் சேர்ந்த அந்­தோ­னி­யம்மா தனக்கு ஏற்­பட்ட நிலையை விளக்­கியபோது, எங்­கட வீடு முற்­றாக நீரில் மூழ்­கி­விட்­டது. துர்­நாற்றம் அடிக்கும் இந்த தண்­ணீர்ல பாதிக்­கப்­பட்ட எந்­த­வொரு பொரு­ளையும் மீள கழுவி எடுப்­பது பொய்­யான விடயம். அனைத்­தையும் இழந்து அக­தி­க­ளாக இருக்கும் எங்­க­ளுக்கு அர­சாங்கம் நல்ல­தொரு தீர்வை பெற்றுத் தர­வேண்டும். அதை விடுத்து எம்மை பார்த்து விட்டு செல்­வதால் ஒன்­றுமே நடக்­கப்­போ­வ­தில்லை. இந்த தண்ணீர் வற்ற இன்னும் ஒரு கிழ­மை­யாகும் என்றார்.

உணவு வேண்டாம் உடை தாருங்கள்

வெள்ளம் ஏற்­பட்­டுள்ள குறித் பிர­தே­சத்து மக்­க­ளுக்கு அன்­றாட உணவு சுத்­த­மாக குடிநீர் என்­பன கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. இருந்த போதிலும் வெள்ள நீர் குடி­யி­ருப்­பு­களை சூழ்ந்­துக்­கொண்­டி­ருக்கும் போது உயிரை காப்­பாற்­றினால் போதும் என ஓடிய மக்கள் தங்­க­ளுக்­கான மாற்­று­டை­களை பற்­றியோ அல்­லது உடை­மை­களை பற்­றியோ சிந்­தித்­தி­ருக்க வாய்ப்­பில்லை. இந்­நி­லையில் அர­சாங்­கமும் பல தொண்டு நிறு­வ­னங்­களும் தங்­க­ளுக்­கான நிவா­ரண உத­வி­களை வழங்கி வரு­கின்­றன. இருந்த போதிலும் அவர்கள் அனை­வரும் உணவை மட்­டுமே கொடுத்து விட்டு செல்­கின்­றனர். இதனால் ஒரு வாரத்­துக்கு மேலாக மாற்­றுடை இல்­லாமல் தவித்து வரு­வ­தாக மக்கள் கூறினர். எனவே நிவ­ரண உத­வி­களை வழங்க முன்­வ­ருவோர் தங்­க­ளுக்­கான உடை­களை கொடுத்­து­த­வு­மாறு கேட்­டுக்­கொண்­டனர்.

தொற்று நோய் அபாயம்

வெள்ளத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள பிர­தே­சங்கள் அனைத்தும் கழி­வுநீர் தேங்­கி­யுள்ள பிர­தே­ச­மாக துர்­நாற்­றத்­துடன் காணப்­ப­டு­கின்­றது. சிறு­வர்கள், முதி­யோர்கள், கர்ப்­பிணி தாய்­மார்கள் உள்­ளிட்டோர் தங்­க­ளுக்கு நோய்கள் பர­வுமோ என்ற அச்­சத்­துடன் மருத்­துவ உத­வி­களை எதிர்ப்­பார்­த்­தி­ருந்­தனர். மேலும் தற்­போது நீர் வடிந்து செல்­கின்­ற­மை­யினால் சிறு நீர்­நி­லை­களில் நுளம்பு பெருக்கம் அதி­க­ரித்­துள்­ளது. இதனால் டெங்கு, வயிற்­றுப்­போக்கு உள்­ளிட்ட நோய்கள் ஏற்­ப­டு­வ­தற்­கான அதி­க­ளவி­லான சந்­தர்ப்­பங்கள் காணப்­ப­டு­கின்­றன.