10 நாடு­களின் தூது­வர்­கள் யாழில் : ரணில் தலைமையில் சர்­வ­தேச விமான நிலை­யம் திறப்பு விழா

By R. Kalaichelvan

17 Oct, 2019 | 10:22 AM
image

(தி.சோபிதன்)

யாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமான நிலையம் பொது மக்­களின் பாவனைக்­காக இன்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் திறந்துவைக்கப்பட­வுள்­ளது.

இந்­நி­கழ்வில் கலந்­து­கொள்ளும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நண்பகல் யாழ் நக­ரி­லுள்ள ஜெட் வின் விருந்­தினர் விடு­தியில் பத்து நாடு­களின் தூது­வர்­க­ளுடன் முக்­கிய சந்­திப்­புக்­க­ளையும் நடத்­த­வுள்ளார்.

யாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமான நிலையம் புன­ர­மைப்புச் செய்­யப்­பட்டு பொது மக்­க­ளுக்­கான விமான சேவையை வழங்­கு­வ­தற்­காக இன்­றைய தினம் சேவைகள் ஆரம்­பித்து வைக்­கப்­ப­ட­வுள்­ளன. இந்த ஆரம்ப விழாவில் இந்­தி­யாவின் சென்­னையில் இருந்து அலைன்ஸ் எயார் நிறு­வ­னத்தின் விமானம் யாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமா­ன­நி­லை­யத்தில் தரை­யி­றங்­க­வுள்­ளது.

சென்­னையில் இருந்து வாரத்தில் ஏழு விமா­னங்­களை பலா­லிக்கு இயங்க வைப்­ப­தற்கு இந்­திய அரசு இணங்­கி­யுள்­ளது. மேலும் வாரத்­திற்கு 12 விமா­னங்­களை இயக்­க­வைப்­ப­தற்கு சிவில் விமான போக்­கு­வ­ரத்து அதி­கார சபை­யினால் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. விமான சேவைகள் ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தை­ய­டுத்து 15 குடி வரவு குடி­ய­கல்வு திணைக்­கள அதி­கா­ரிகள் கொழும்பில் இருந்து யாழ்ப்­பா­ணத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

மிகப் பிர­மாண்­ட­மாக ஆரம்­பித்து வைக்­கப்­ப­ட­வுள்ள இந்­நி­கழ்­விற்கு பிர­தமர், அமைச்­சர்கள் எனப் பெரு­ம­ள­வானோர் கலந்­து­கொள்ளவுள்ளனர்.

 யாழ்ப்­பா­ணத்தில் விமான சேவை­களை ஆரம்­பித்து வைக்கும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  அதன்­பின்னர் மதியம் அமெ­ரிக்கா மற்றும் மேற்கு­லக நாடுகளின் தூதுவர்கள் பத்துப்பேரை சந்தித்து பேசவுள்ளார்.

 யாழ்ப்பாணத்தில் வைத்து வெளிநாட்டுத் தூதுவர்களை ரணில் விக்கிரமசிங்க சந்திப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right