மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ,‘ஓ மை கடவுளே’ என்ற படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.  

அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஓ மை கடவுளே’. இந்தப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். 

இதுகுறித்து இயக்குநர் தெரிவிக்கையில்,

‘பால்ய வயதில் முதன்முதலாக தோன்றும் காதலை வாழ்க்கையின் வேறு பகுதியில் சந்திக்கும் போது ஏற்படும் சுவராசியங்களை மையப்படுத்திய இந்த திரைக்கதையில் முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரம் ஒன்றில், விஜய் சேதுபதி நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருதினேன். இதுகுறித்து தயாரிப்பாளர், நாயகன் அசோக் செல்வனும், நானும் விஜயசேதுபதி சந்தித்து கதையைச் சொல்லி அவர் நடிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தோம்.  அவர் அதை புரிந்து கொண்டு கௌரவ வேடத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். அவர் நடிக்கும் காட்சிகளை சென்னையில் படமாக்கினோம். தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.” என்றார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சில ஆண்டுகளாக திரைப்படங்களில் கௌரவ வேடத்தில் நடிப்பதை தவிர்த்து வருகிறார் என்று செய்திகள் வெளியான நிலையில் அவர் மீண்டும் ‘ஓ மை கடவுளே’ படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.  

இதனிடையே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஜிகிர்தண்டா, கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் பொலிஸ், கதாநாயகன், ட்ராபிக் ராமசாமி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களில் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார் என்பதும், இவரின் நடிப்பில் விரைவில் சங்கத்தமிழன், கடைசி விவசாயி, மாமனிதன் ஆகிய படங்கள் இந்த ஆண்டிற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.