யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததுடன் வடக்கு அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட்டதுடன் அங்குள்ள மக்களையும் சந்தித்து உரையாடியுள்ளார்.

இள்று மாலை 3.30 மணியளவில் யாழ்ப்பாணத்திற்கு சென்ற அவர் சண்டிப்பாய் பிரதேச செயலகர் பிரிவின் கீழுள்ள கல்லுண்டாய் வெளியில் வடக்கு அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வீட்டுத்திட்டத்தை பார்வையிட்டுள்ளார். 

பிரமருடன் கல்விராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா எம்.ஏ.சுமந்திரன் சி.சிறீதரன் ,ஈ.சரவணபவன் , த. சித்தார்த்தன் சிவமோகன் மற்றும் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் யாழ். மாநகரசபை முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஜெபநேசன் வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் நடனேந்திரன் உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அப்பகுதி பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மானிப்பாய் மற்றும் தெல்லிப்பளை பருத்தித்துறை சாவகச்சேரிப் பகுதிகளுக்கும் சென்று கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

மேலும் நாளை யாழ். சர்வதேச விமான நிலையத்தையும் திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.