2011 செட்டிக்குளம் விபத்து: முன்னாள் எம்.பி. ஸ்ரீ ரங்காவை கைதுசெய்யுமாறு ஆலோசனை

Published By: Vishnu

16 Oct, 2019 | 07:12 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயரத்னம் ஸ்ரீ ரங்கா உட்பட 6 பேரை கைதுசெய்து வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான தப்புல டி லிவேரா ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஸ்ரீ ரங்கா செலுத்தியதாக கூறப்படும் ஜீப் ரக வாகனம் செட்டிக் குளத்தில் வைத்து விபத்துக்குள்ளானதில் அமைச்சரவை பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான  விசாரணைகளில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.  

அதன்படி குறித்த சம்பவம் தொடர்பில் விபத்தை ஏற்படுத்தியமைக்கு மேலதிகமாக அதனை மறைக்க போலி ஆவணங்களை உருவாக்கியமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயரத்னம் ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட 6 பேரைக் கைதுசெய்து வவுனியா நீதிமன்றில்  ஆஜர்செய்து சந்தேகநபர்களாக பெயரிட்டு அவர்களிடம் மேலதிக வாக்கு மூலம் பதிவு செய்யுமாறு  சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா ஆலோசனை வழங்கியுள்ளார். 

பொலிஸ் தலைமையகத்தின் விஷேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளருக்கு அவர் இந்த ஆலோசனையை இன்று எழுத்து மூலம் வழங்கியதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

இதேவேளை இவர்களை கைது செய்ததன் பின்னர், அவர்களிடம் நடத்தும் விசாரணைகளில் போலி ஆவணங்களை தயாரிக்க ஆலோசனை வழங்கியவர்கள் தொடர்பில் விஷேடமாக அவதானம் செலுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரியொருவர் கூறினார்.  

ஏற்கனவே இடம்பெற்றுள்ள ஆரம்பகட்ட விசாரணைகளில் அப்போதைய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் தொடர்பில் தகவல்கல் வெளிப்படுத்தப்பட்டுள்ளதால் அது தொடர்பில் மேலதிக விசாரணைகளில் அவதானம் செலுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த...

2024-02-24 07:36:47
news-image

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய...

2024-02-24 07:12:23
news-image

இன்றைய வானிலை 

2024-02-24 07:19:01
news-image

தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்...

2024-02-24 07:21:28
news-image

வெற்றிலைக்கேணியில் விபத்து : செய்தி சேகரிக்க...

2024-02-24 00:29:49
news-image

நாட்டின் தேசிய அடையாளம், சட்டத்தின் ஆட்சியை...

2024-02-23 22:05:26
news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21
news-image

வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட...

2024-02-23 19:40:36