(இராஜதுரை ஹஷான்)

மலையக மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக போலியான வாக்குறுதிகளை முன்வைக்கின்றார் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன, நாட்டை அனைத்து துறைகளிலும் சீரழித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையிலான அரசாங்கம் மீண்டும் ஒருபோதும் தலைதோங்காது எனவும் தெரிவித்தார்.

ஹொரணையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள  தோட்ட புற மக்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றும் விதமான முறையாக கொள்கைத்திட்டங்களை வகுத்துள்ளோம். மலையக பிரதேசத்தின் அபிவிருத்திக்கு  கடந்த அரசாங்கம் முன்னெடுத்த செயற்திட்டங்களை கூட நல்லாட்சி அரசாங்கம் செயற்படுத்தவில்லை.

தேசிய உற்பத்திகளை வலுப்படுத்தும் விதமாக தேயிலை , இறப்பர் மற்றும் உபரி பயிர் செய்கைகள் அனைத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படும். நாட்டின் பொருளாதாரத்தை  தேசிய உற்பத்திகளின் ஊடாகவே வெற்றிக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.