கடந்த 24 மணி நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் வன்முறை தொடர்பில் 85 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பில் 650 முறைப்பாடுகளும், ஆறு வன்முறை சம்பவங்கள் மற்றும் 17 முறைப்பாடுகளும் உட்பட மொத்தம் 673 சம்பவங்கள் கடந்த 08 ஆம் திகதியிலிருந்து இதுவரை பதிவாகியுள்ளது.

தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு 289 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் ஆணைக்குழுவுக்கு 361 முறைப்பாடுகளும் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.