மண்­ச­ரிவு ஏற்­பட்ட அர­நா­யக்க பகு­தியில் இது­வ­ரையில் 25 சட­லங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தோடு, 138 பேர் காணா­மல்­போ­யுள்­ள­தா­கவும் தேடுதல் பணிகள் தொடர்ந்தும் இடம்­பெற்று வரு­வ­தா­கவும் தெரி­வித்­துள்ள அர­சாங்கம்,கொழும்பில் தேங்­கிக்­கி­டக்கும் குப்­பை­களை அகற்ற விசேட திட்­ட­மொன்றை முன்­னெ­டுக்க ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பணிப்­புரை விடுத்­துள்­ள­தா­கவும் தெரி­வித்­தது. கொழும்பில் இடர் முகா­மைத்­துவ அமைச்சில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே அரசு இதனைத் குறிப்­பிட்­டுள்­ளது.

இங்கு உரை­யாற்­றிய இடர் முகா­மைத்­துவ அமைச்சர் அநுர பிரி­ய­தர்­ஸன யாப்பா,

மழை வெள்ளம் தற்­போது குறைந்­துள்­ளது நீர் வழிந்­தோட ஆரம்­பித்­துள்­ள­தோடு, களனி கங்­கை­யிலும் நீர்­மட்டம் குறைந்­துள்­ளது. இந்­நி­லையில் மழை வெ ள்ளத்தால் பாதிக்­கப்­பட்ட 4 இலட்சம் மக்­களின் தொகையும் 3 இலட்­ச­மாக குறைந்­துள்­ளது. 600 இடைத்­தங்கல் முகாம்கள் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. அம் முகாம்­களின் தொகை 300 ஆக குறைந்­துள்­ளது.

பெரும்­பா­லான மக்கள், வெள்ளம் குறைந்து வரும் நிலையில் தத்­த­மது வீடு­க­ளுக்கு செல்ல ஆரம்­பித்­துள்­ளனர். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தேவை­யான உணவு வழங்­கப்­ப­டு­கி­றது. உலர் உணவுப் பொருட்­களும் தேவை­யான அளவு உள்­ளது. வெ ளிநா­டு­க­ளி­லி­ருந்தும் நிவா­ரணப் பொருட்கள் கிடைத்­துள்­ளன. தற்­போது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உடை, தலை­யணை, பெட்சீட், மெத்தை போன்ற பொருட்­களே தேவைப்­ப­டு­கி­றன.

அர­நா­ய­காவில் 25 பேர் மர­ண­ம­டைந்­துள்­ளனர், 138 பேர் காணாமல் போயுள்­ளனர். காணா­மல்­போ­னோரை தேடும் பணிகள் தொடர்­கின்­றன. முப்­ப­டை­யி­னரும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­றனர்.

இவ்­வாறு மீட்புப் பணிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் பிர­தே­சங்­க­ளுக்கு மக்கள் பார்­வை­யிடச் செல்­வதை தவிர்க்க வேண்டும். இவ்­வாறு மக்கள் செல்­வதால் மீட்புப் பணி­களில் ஈடு­ப­டுவோர் நெருக்­க­டி­களை எதிர்­நோக்­கு­கின்­றன. அத்­தோடு மழை வெ ள்ளத்தால் முற்­றாக சேத­ம­டைந்த வீடு­க­ளுக்கும் ஒரு பகுதி சேத­ம­டைந்த வீடு­க­ளுக்கும் செல்­வதை மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மழை வெள்­ளத்தால் கொழும்பு நகரில் குப்­பைகள் குவிந்து கிடக்­கின்­றன. குப்­பை­களை கொட்டும் மீதொட்­ட­முல்லை பகு­தியில் வெள்ளம் ஏற்­பட்­டுள்­ளதால் குப்பை லொறிகள் அங்கு செல்ல முடி­யாது. இது தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளதோடு கொழும்பில் குப்பைகளை வெ ளியேற்ற விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதோடு, அதற்கான பணிப்புரைகளையும் ஜனாதிபதி விடுத்துள்ளார் என்றும் அமைச்சர் அநுரபிரியதர்ஸன யாபா குறிப்பிட்டார்.