உலகின் இரண்டாவது மிகப்பெரிய சரக்கு விமானமான அன்டோனோவ் அன் -124 (Antonov An-124) என்ற விமானம் இன்று ஒன்பதாவது முறையாவும் மத்தளை ராஜபக்ஷ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

துர்க்மினிஸ்தானின் அஷ்கபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வந்த மேற்படி விமானமானது இன்று காலை 10.07 மணியளவில் மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகவும், நாளை இரவு 10.15 மணிக்கு அவுஸ்திரேலியாவின் போர்ட் ஹெட்லேண்ட் விமான நிலையத்தை நோக்கி புறப்படவுள்ளதாகவும் மத்தளை விமான நிலைய அதிகாரிகள் சுட்க்காட்டியுள்ளனர்.

குறித்த விமானமானது எரிபொருள் நிரப்புவதற்காகவே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 109,000 லிட்டர் எரிபொருள் விமானத்திற்கு தற்போது நிரப்பப்பட்டும் உள்ளது.

அத்துடன் விமானத்தில் இருந்த 19 பணியாளர்களும் தற்போது ஓய்வெடுத்து வருவதாகவும் மத்தளை விமான நிலைய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.