(இராஜதுரை ஹஷான்)
ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதலின் உண்மைகள் நாட்டு மக்களுக்கு இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. பயங்கரவாதி சஹ்ரானின் பின்னணியின் இருந்த அமைச்சர்கள் யார் உள்ளிட்ட அடிப்படைவாத அமைப்புக்களின் பின்புலங்கள் அனைத்தையும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவினால் பகிரங்கப்படுத்த முடியுமா? என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில்
குண்டுத்தாக்குதல் இடம் பெற்று ஐந்து மாதங்கள் கடந்தும் இன்னும் தாக்குதலுக்கான காரணம், பயங்கரவாதி சாஹ்ரானுக்கு உதவி புரிந்த அமைச்சர்கள், அடிப்படைவாத அமைபபுக்களுக்கு எங்கு இருந்து நிதி கிடைக்கப் பெற்றது என்ற உண்மைகள் எதுவும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
ஆனால் உண்மைகள் அனைத்தும் அரசாங்கம் நன்கு அறியும் நாட்டு மக்களிடம் வாக்குகளை கோரும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ போலியான வாக்குறுதிகளை வழங்குவதை விடுத்து குண்டுத்தாக்குதல் குறித்த உண்மைகளை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.
அத்துடன் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் இடம் பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் தேசிய நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது என அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM