பொகவந்தலாவையில் உள்ள பாடசாலை ஒன்றில் குண்டுப்புரளியையடுத்து அங்கு பதற்றம் நிலவியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

அத்தோடு பாடசலையின் ஆரம்பபிரிவிலேயே இவ்வாறு சந்தேகத்திற்கிடமான பொதியொன்று இருப்பதை அவதானித்த நிலையில் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாடசாலை மாணவர்களை உடனடியாக வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.