அருக்காட்டுக்கு குப்பை கொண்டு செல்லும் நடவடிக்கையை இன்று பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக பாரிய நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அருவக்காடு குப்பை முகாமைத்துவ வேலைத்திட்டம் தொடர்பில் கொழும்பு மாநாகர மேயர் ரோஸி சேனாநாயக்க முன்வைத்த விமர்சனம் தொடர்பில் தாம் தவறை ஒப்புக்கொள்வதாக கொழும்பு மாநகர சபையினால் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பு மாநாகர மேயர் ரோஸி சேனநாயக்காவின் விமர்சனத்தால் கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை அருவக்காடு குப்பை சேகரிப்பு நிலையத்தில் கொட்டும் நடவடிக்கை  இன்று (16)  முதல் இடை நிறுத்தப்படுவதாக பாரிய நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.