பதுளை – வேவெஸ்ஸ பெருந்தோட்டப்பிரிவில் கழுத்தில் சுருக்கிட்டு மரணமாகியவரின் மரணத்தில் சந்தேகம் நிலவியதையடுத்து இது குறித்து தீவிர புலன் விசாரணைகளில் பதுளைப் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

வேவெஸ்ஸ பெருந்தோட்டப் பிரிவில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்றிருப்பதாகப் பெண் தொழிலாளியொருவர் இன்று  வழங்கிய தகவலையடுத்து பதுளை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதியுடன் ஸ்தலத்திற்கு பொலிசார் விரைந்தனர். 

அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் நீதிபதி சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்காக பதுளை அரசினர் வைத்தியசாலையின் பிரேத அறைக்குக் கொண்டு சென்று சட்ட வைத்திய பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

35 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் இனம்காண முடியாத நிலையில் உருக்குலைந்து இருப்பதாகத் தெரிவித்த பொலிசார் சடலத்தை இனங்காணும் வகையில் பொது மக்களின் உதவிகளை பதுளைப் பொலிசார் எதிர்பார்க்கின்றனர். 

அத்தோடு குறித்த  மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.