தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ‘பிகில்’ படத்தின் டிரைலர் வெளியாகி, குறுகிய நேரத்தில் அதிக லைக்குகளை பெற்று சாதனை செய்துள்ளது.

தெறி, மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லி, மூன்றாவது முறையாக தளபதி விஜய்யுடன் இணைந்து இருக்கும் திரைப்படம் பிகில். ஏ.ஜி.எஸ். நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளியாகவிருக்கிறது.

இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. வெளியான 24 மணித்தியாலத்தில் 20 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பார்வை பெற்று சாதனை புரிந்தது. அத்துடன் ‘பிகில்’ படத்தின் டிரைலர் வெளியாகி, மிக விரைவாக 2 மில்லியன் லைக்குகளை பெற்று, மற்றொரு சாதனையும் செய்திருக்கிறது. இதனால் விஜயின் ரசிகர்கள் உற்சாகத்துடன் வலம் வருகிறார்கள்.

இதனிடையே விஜய் =அட்லி கூட்டணியில் தயாராகியிருக்கும் பிகில் படத்தின் கதை குறித்து மேலும் ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.