நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளை நவம்பர் மாதம் 18 ஆம் திகதி நண்பகலுக்கு முன் வெளியிட வாய்ப்புள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தேர்தல் நடைபெற்ற மறுநாள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும்.

எனினும் இம்முறை ஜனாதிபதி வேட்பாளர்களின் தொகை அதிகரித்தமையினால் தேர்தல் தொடர்பான இறுதி முடிவினை அடுத்த நாள் வெளியிடுவது சிரமமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உறுதிப்படுத்தப்படாத தேர்தல் தொடர்பான முடிவுகளை சமூக ஊடகங்கள் வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.