இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பாவனைக்கு விடவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை பாவனையுடன் அடையாளயின் இலக்கமும் மாற்றமடையுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது பாவனையில் உள்ள 9 இலக்கங்களையுடைய அடையாள அட்டை 12 இலக்கமுடைய அடையாள அட்டையாக மாற்றம் பெறவுள்ளது.

புதிய முறைக்கமைய முதல் 4 இலக்கங்களும் பிறந்த வருடத்தையும் இறுதி 4 இலக்கங்களுக்கு முன் வரும் பூஜ்ஜியமும் சேர்த்து மொத்தமாக 12 இலக்கங்களுடன் புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை வழங்க உத்தேசித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


1972 ஆம் ஆண்டு முதல் தேசிய அடையாள அட்டையானது 9 இலக்கங்களுடன் V மற்றும் X ஆகிய ஆங்கில எழுத்துக்கள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.