சிம்பாப்வே மற்றும் நேபாள கிரிக்கெட் அணிகள் மீது விதிக்கப்பட்ட தடையினை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தை நீக்கியுள்ளது.

சிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு காரணமாக கடந்த ஜூன் 22 ஆம் திகதி சிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகம் ஐ.சி.சி. கலைத்தது. 

அதன் பின்ன கிரிக்கெட் சிம்பாப்வே கிரிக்கெடை நிர்வகிக்க இடைக்கால நிர்வாக குழுவை சிம்பாப்வே அரசு அமைத்தது. 

இதுகுறித்து விவாதித்த ஐ.சி.சி. விதிகளை மீறி செயல்பட்ட சிம்பாப்வே அணிக்கு கடந்த ஜூலை மாதம் தடை விதித்தது.

இதே காரணத்திற்காக 2016 இல் நேபாள அணிக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது தடை நீக்கப்பட்டது. 

இது குறித்து ஐ.சி.சி., தலைவர் சஷாங்க் மனோகர் வெளியிட்ட அறிக்கையில், ஐ.சி.சி., விதிகளை நிபந்தனை இன்றி ஏற்றுக் கொண்ட சிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகம் மீண்டும் நிரந்தர உறுப்பினராக ஏற்கப்பட்டது. 

இதேபோல நேபாள கிரிக்கெட் சங்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தை அடுத்து, இதன் மீதான தடையும் விலக்கிக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.