விஜயின் ‘பிகில்’ ட்ரெய்லர் குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரஸ்ஸல் ஆர்னோல்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ரஸ்ஸல் ஆர்னோல்ட்,  

‘பிகிலாய்ய்ய்ய்! டேய் சீனி மாமா.. எனக்கு தளபதி விஜய் படங்களை அறிமுகப்படுத்தியதற்காக நன்றி. ‘பிகில்’ ட்ரெய்லரை முழுக்க ரசித்தேன். ராயப்பன் கதாப்பாத்திரம் இருக்கிறதே அது மாஸ் அவதாரம். யாராவது எனக்கு இரண்டு டிக்கெட்கள் கொடுங்கள் நண்பா” என்று குறிப்பிட்டு உற்சாகமாகி உள்ளார்.