சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தர்பார்’ படம் தொடர்பான புதிய தகவலை அப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

ஏற்கெனவே ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். லைகா நிறுவனம் ‘தர்பார்’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்தத் திரைப்படத்தில் ரஜினி பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘தர்பார்’ குறித்த புதிய தகவல் கொடுத்துள்ளார். 

அதில், கமல் பிறந்த நாளான நவம்பர் 7 ஆம் திகதி ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரும், தீம் மியூசிக்கும் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.