கேகாலை, அரநாயக்க, சாமசர மலை பகுதி மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களை கேகாலை மாவட்ட செயலாளர்களிடத்திலோ அல்லது மாவனல்ல  பிரதேச செயலாளரிடத்திலோ ஒப்படைக்குமாறு அரநாயக்க, பிரதேச செயலாளர் எம்.பைசால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது, அதிகளவிலான நிவாரண பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அரநாயக்க, பிரதேச செயலகத்தில் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கான வசதியின்மையும் காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாம் விரும்பியபடி நிவாரண பொருட்களை கொண்டு வர வேண்டாம் எனவும், அரநாயக்க, பிரதேச செயலாளர் அல்லது கேகாலை மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைகளை பின்பற்றுமாறும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.