கொஹவல பொலிஸ்  பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று முன்தினம் கொஹவல பிரதேசத்தில் 2 கிராம் 200 மில்லிகிராம் ஹெராயின் போதை பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஹவல பொலிசார் குறிப்பிட்டனர்.

பொல்கஸ் ஓவிட  பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய சந்தேக நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹவல பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.