"உங்கள் வாக்கு யாருக்கு? நீங்கள் எப்­படி வாக்­க­ளிக்க வேண்டும்?": ஜனாதிபதி தேர்தல் 2019

Published By: J.G.Stephan

16 Oct, 2019 | 12:00 PM
image

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடை­பெ­ற­வி­ருக்கும் ஜனாதி­பதி தேர்தல் 8 ஆவது ஜனாதி­ப­தித்­தேர்­த­லாகும். இதற்கு முன்னர் நடை­பெற்ற ஜனாதி­பதித் தேர்­தல்­க­ளி­லி­ருந்து இம்­முறை ஜனாதி­பதித் தேர்தல் பல விசேட அம்­சங்­களைக் கொண்­டுள்­ளது. அவற்றுள் மிக முக்­கி­ய­மா­னது முன்­னைய ஜனாதி­ப­தி­களோ, நடை­மு­றையில் உள்ள பிர­த­மரோ ஜனாதி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டா­மை­யாகும். மேலும் இம்­முறை தேர்­தலில் முன்னர் எப்­போதும் இல்­லாத அள­வுக்கு ஜனாதி­பதி பத­விக்கு 35 அபேட்­ச­கர்கள்   போட்­டி­யி­டு­கின்­றனர்.

மேலும் சிறு­பான்மை இனத்­த­வரின், மதத்­த­வரின் ஆசிர்­வா­தத்தை பெற்ற கட்­சி­களின் சார்பில் யாரும் போட்­டி­யி­ட­வில்லை. அவ் இனத்­தி­னது மதத்­தி­னது அபேட்­ச­கர்கள் இருவர் போட்­டி­யி­டு­வது உண்­மை­யா­யினும் அவர்கள் தாங்கள் சேர்ந்த கட்­சி­களின் சார்பில் போட்­டி­யி­ட­வில்லை என கூறப்­ப­டு­கி­றது. மேலும் ஒரே­யொரு பெண்­ம­ணியும், பௌத்த துற­வியும், இரா­ணுவத் தள­ப­தியும் போட்­டி­யி­டு­கின்­றனர்.

இவ்­வாறு பல்­வேறு விசேட அம்­சங்­களைக் கொண்ட இந்த ஜனாதி­பதித் தேர்­தலில் யார் வெற்றி பெறப் போகிறார் என்­பதை முன்­கூட்­டியே பலர் கூறி­னாலும் இறுதி வரை இக்­கூற்று எப்­படி முடியும் என்று இப்­போது கூற முடி­யாது. ஆகவே நாங்­களும் அமை­தி­யுடன் இருந்து இத்­தேர்­தலை அவ­தா­னிப்­ப­துடன் இறு­தியில் எமது வாக்­கையும் தவ­றாமல் அளிக்க வேண்டும். யாருக்கு அளிப்­பது என்­பது ஒவ்­வொரு வாக்­கா­ளரின் முடிவில் தங்­கி­யி­ருக்க வேண்­டு­மே­யொ­ழிய பிற­ரது வற்­பு­றுத்­தலில் தங்­கி­யி­ருக்க கூடாது என்­பதை மனதில் எடுக்க வேண்டும்.



சிறு­பான்மை இனத்­த­வ­ரது மதத்­த­வ­ரது ஒற்­று­மையை பிர­தி­ப­லிக்கும் தேர்­த­லாக அமையப் போகும் தேர்தல் இது­வாகும்

வழக்­க­மாக எத்­தேர்­தல்­வ­ரினும் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் வாழும் மக்­களின் பெரும்­பான்­மை­யோரும் இதே இன மதத்தைக் கொண்­டுள்ள வேறு மாகா­ணங்­களில் வாழும் சிறு­பான்­மை­யோரும் ஆகிய இரு பகு­தி­யாரும் ஒரே எண்­ணத்­துடன் இருப்­பதை பல வழி­களில் நாம் காணக்­கூ­டி­ய­தா­க­வி­ருக்­கி­றது.

நாட்டில் இன, மதத்­து­வே­ச­மற்ற ஒரு நிலை நிலவ வேண்டும் என்றும் அதற்கு தமது வாக்கை அளிக்க வேண்டும் என்ற மன­நி­லையில் உள்­ளார்கள் என்­பதை காணக்­கூ­டி­ய­தா­யி­ருக்­கி­றது. ஆகவே இம்­முறை ஜனாதி­பதித் தேர்தல் அமை­தி­யான தேர்­த­லா­கவும், எதிர்­கா­லத்தின் சுபிட்­சத்­திற்கு ஆதா­ர­மா­ன­தா­கவும் அமையும் எனவும் கூறலாம்.

தேர்தல் ஆணை­யாளர் பொலி­ஸாரின் நடு­நி­லைமை
19 ஆவது அர­சி­ய­ல­மைப்புச் சட்­ட­தி­ருத்­தத்தின் கீழ் தேர்தல் ஆணை­யா­ள­ருக்கு அவ­ரது கட­மையைச் செய்ய பல அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. பொது­சன அபிப்­பி­ரா­யத்தை பிழை­யாக திரித்து கூறு­வதை தடுத்தும் உண்­மை­யான நிலை­களை எடுத்துக் கூறவும் தேர்தல் ஆணை­யாளர் பத்­தி­ரி­கை­க­ளுக்கும் தொலைக்­காட்­சி­க­ளுக்கும் விடுத்த வேண்­டு­கோளை அந்­நி­று­வ­னங்கள் புறக்­க­ணிக்­காது செய்­தி­களை பிர­சு­ரிக்­கின்­றன.

ஆயினும் தமது நிறு­வ­னங்­களின் நல­னையும் அவை கவ­னித்து செய்­தி­களை வெளி­யி­டு­கின்­றன. இது தவிர்க்க முடி­யா­த­தாகும்.

தேர்தல் ஊர்­வ­லங்கள், கட்­அவுட் மற்றும் மின்­சார கம்­பங்­களில் தொங்­க­விடும் கட்சிக் கொடிகள் மற்றும் பொதுச் சுவர்­களில் காட்­சிப்­ப­டுத்­தப்­படும் அபேட்­ச­கர்­களின் படங்கள் என்­ப­வற்­றையும் கட்­டுப்­ப­டுத்த ஆணை­யாளர் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது வர­வேற்­கப்­பட வேண்­டி­ய­தொன்­றாகும்.

பொலிஸ் மாஅ­திபர்
சில காலத்­துக்கு முன்னர் நடை­பெற்ற தேர்­தல்­களில் சட்­ட­வி­தி­களை மீறு­கி­ற­வர்­களை கைது செய்து பொலிஸ் நிலை­யத்தில் தடுத்து வைத்­தி­ருந்­தாலும் நீண்ட காலத்­துக்கு அவர்­களை தடுத்து வைக்க அர­சி­யல்­வா­திகள் இட­ம­ளிப்­ப­தில்லை. தற்­போது இந்­நிலை மாறி­யுள்­ள­துபோல் தெரி­கி­றது.

தற்­போது தேர்தல் சட்­ட­வி­தி­களை மீறு­ப­வர்­களை கைது செய்­யு­மாறும் வழக்­கு­களை தாக்கல் செய்­யு­மாறும் பொலிஸ் மாஅ­திபர் கட்­ட­ளை­யிட்­டுள்­ளதால் பொலி­ஸாரும் மற்றும் பொலிஸ் அதி­கா­ரி­களும் கட்சி பேத­மின்றி சட்­டத்தை மீறு­ப­வர்­களை கைது செய்து வரு­கின்­றனர். இதனால் தேர்தல் காலத்தில் நடை­பெறும் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கைகள் குறையும் என்­ப­துடன் மேலும் குறை­யலாம் என எதிர்­பார்க்­கலாம்.

ஆகவே இம்­முறை வாக்­கா­ளர்கள் பய­மின்றி தமது வாக்கை தாம் விரும்­பிய அபேட்­ச­க­ருக்கு அளிக்­கலாம் எனக்­கூற முடியும்.


தேர்தல் தினத்­தன்று நீங்கள் எப்­படி வாக்­க­ளிக்க வேண்டும்?
நவம்பர் 16 ஆம் திக­திக்கு முன்னர் உங்­க­ளுக்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மான தேர்தல் அட்­டைகள் கிடைக்கும். அந்த வாக்­காளர் அட்­டையில் தேர்தல் மாவட்­டத்தின் பெயரும் இலக்­கமும், வாக்­கா­ளரின் பெயர், முக­வரி, பதிவு இலக்கம், வாக்­கெ­டுப்பு பிரிவு, வாக்­கெ­டுப்பு மாவட்டம், வாக்­க­ளிக்க ஒதுக்­கப்­பட்­டுள்ள வாக்­கெ­டுப்பு நிலையம், வாக்­க­ளிக்கும் திக­தியும் நேரங்­களும் குறிக்­கப்­பட்­டி­ருக்கும்.

தபால் மூலம் வாக்­க­ளிப்­ப­வர்­க­ளுக்கு இவ்­வாக்­காளர் அட்டை அனுப்பி வைக்­கப்­பட மாட்­டாது.

சில சம­யங்­களில் இவ்­வாக்­காளர் அட்டை கிடைக்­காமல் இருக்­கலாம். கிடைக்­கா­விட்டால் வாக்­காளர் அறி­முக அட்­டை­யுடன் தபால் நிலை­யத்­திற்கு சென்று தபால் அதி­ப­ரிடம் விசா­ரிக்க வேண்டும். அங்கு அவ­ரது வாக்­காளர் அட்டை இருப்பின் தபால் அதிபர் அதனை உங்­க­ளுக்கு வழங்­குவார். வாக்­காளர் வந்து கேட்­கா­விட்டால் அந்த வாக்­காளர் அட்டை தபால் நிலை­யத்­தி­லேயே வைக்­கப்­பட்­டி­ருக்கும்.

ஒரு­வ­ரது வாக்­காளர் அட்­டையை இன்­னு­மொ­ரு­வ­ருக்கு வழங்­குதல் குற்­ற­மாகும். 6 மாத சிறைத் தண்­ட­னையும் உண்டு.

தபாலில் வாக்­காளர் அட்டை கிடைத்தால் அதனை கவ­ன­மாக வைத்­தி­ருக்க வேண்டும். எங்கே வாக்­க­ளிப்­பது என்­பதை மனதில் நினைவில் வைத்­தி­ருக்க வேண்டும்.

தேர்தல் தினத்­தன்று நீங்கள் வாக்­க­ளிக்க வாக்­க­ளிப்பு நிலை­யத்­திற்கு செல்­லும்­போது கட்­டாயம் உங்­க­ளிடம் உள்ள உத்­தி­யோ­க­பூர்வ வாக்­காளர் அட்­டையை கொண்டு செல்ல வேண்டும். இவ் அட்டை இல்­லாத பட்­சத்தில் வாக்­க­ளிக்க முடி­யாது என்று யாரும் கூற மாட்­டார்கள். ஆனால் வாக்­காளர் அட்­டையை நீங்கள் கொண்டு சென்றால் தேர்தல் அதி­கா­ரிக்கு அது உத­வி­யா­யி­ருக்கும்.

அடை­யாள அட்டை அவ­சியம்

கட்­டாயம் கொண்டு செல்ல வேண்­டிய ஆவணம் என்­ன­வெனில் உங்­களை அடை­யாளம் காட்டும் ஆவ­ண­மாகும். அவை,

01. தேசிய அடை­யாள அட்டை

02. கடவுச்சீட்டு

03. சாரதி அனு­மதிப் பத்­திரம்

04. ஓய்வூதியக்கார­ராயின் ஓய்வூதிய அட்டை

05. முதியோர் அடை­யாள அட்டை

06. ஆட்­ப­திவு திணைக்­க­ளத்­தினால் விநி­யோ­கிக்­கப்­படும் மத­கு­ரு­மார்­க­ளுக்­கான அடை­யாள அட்டை.

07. தேர்தல் செய­ல­கத்தால் விநி­யோ­கிக்­கப்­படும் தற்­கா­லிக அடை­யாள அட்டை.

மேலே கூறி­யவை தவிர வேறு புகைப்­ப­டங்கள் அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டாது. ஆகவே நீங்கள் வாக்­க­ளிக்க செல்லும் போது கட்­டாயம் மேலே­யுள்ள அடை­யாள அட்­டை­களில் ஒன்றை கொண்டு செல்ல தவ­றக்­கூ­டாது. வாக்­க­ளிக்கும் நேரத்­திற்குள் வாக்­க­ளித்து விட வேண்டும். பெரும்­பாலும் காலை 7  மணி­முதல் 4  மணி வரை­யுமே வாக்­க­ளிப்பு நடை­பெ­று­வது உண்டு.


ஜனாதி­பதித் தேர்­தலில் எப்­படி வாக்­க­ளிப்­பது

நவம்பர் 16 ஆம் திகதி நடை­பெ­றப்­போவது  ஜனாதி­பதித் தேர்­த­லாகும். ஜனாதி­பதி தேர்­த­லுக்கு வாக்­க­ளிக்கும் முறை ஏனைய பாரா­ளு­மன்ற, மாகா­ண­சபை உள்­ளூ­ராட்சி தேர்­தலில் வாக்­க­ளிக்கும் முறை­யி­னின்றும் வேறு­பட்­டது. ஆகவே அதனை தெளி­வாக அறிய வேண்டும்.

அர­சி­ய­ல­மைப்பின் படி ஜனாதி­ப­தி­யா­னவர் மக்­களால் தெரிவு செய்­யப்­ப­டு­கிறார். 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்­புக்கு முன்னர் தேசா­தி­பதி  மக்­களால் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தில்லை. பிர­த­மரின் சிபார்சின் படியே அவர் தெரிவு செய்­யப்­ப­டு­கிறார். ஆனால் 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்­புக்கு பின்னர் மக்­களே ஜனாதி­ப­தியை தெரிவு செய்­கின்­றனர்.

வாக்­க­ளிப்பு நிலை­யத்­திற்கு நீங்கள் சென்று உங்­க­ளது அடை­யா­ளத்தை நிரூ­பித்­ததன் பின்னர் தேர்தல் அதி­காரி உங்­க­ளது பெயர் வாக்­காளர் இடாப்பில் இருந்தால் உங்­க­ளுக்கு ஒரு வாக்குச் சீட்டைத் தருவார்.

அந்த வாக்குச் சீட்டை பெற்றுக் கொண்டு வாக்கை அடை­யா­ளப்­ப­டுத்தும் இடத்­திற்கு செல்ல வேண்டும். இம்­முறை முப்­ப­துக்கும் மேற்­பட்­ட­வர்கள் ஜனா­தி­பதி பத­விக்கு போட்­டி­யி­டு­வதால் வாக்கு சீட்டில் நீங்கள் யாருக்கு வாக்­க­ளிக்க உத்­தே­சித்­துள்­ளீர்­களோ அவ­ரது பெயரை தேட வேண்டும். பெயரை தேட முடி­யா­விட்டால் அவ­ரது சின்­னத்தை தேட வேண்டும். பெயரை அல்­லது சின்­னத்தை அறிந்து கொண்ட பின்னர் அந்த வாக்குச் சீட்டில் உள்ள கோட்­டுக்குள் நீங்கள் 1 என்ற இலக்­கத்தை அடை­யா­ள­மிட வேண்டும்.

இதனை மனதில் வைத்­துக்­கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பின் ஒரு­வ­ருக்கே வாக்­க­ளித்து விட்டு வாக்குச் சீட்டை பெட்­டிக்குள் போடலாம்.

ஆனால் ஜனாதி­பதி தேர்­தலில் 2, 3 ஆம் தெரி­வையும் நீங்கள் அடை­யா­ள­மி­டலாம். உத­வி­யாக நீங்கள் 1 ஐ அளித்த பின்னர் இன்னும் ஒரு­வ­ருக்கு உங்­க­ளது விருப்பு வாக்கை கொடுக்க தீர்­மா­னித்தால் அதனை நீங்கள் விரும்­பு­கின்ற பெயர் உள்­ள­வரின் கோட்­டுக்குள் 2 என எழுத வேண்டும்.

அதேபோல் இன்னும் ஒரு­வ­ரையும் நீங்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தலாம். அதா­வது 1 ஆவது ஆள் யார் என்று அடை­யா­ளப்­ப­டுத்­திய பின்னர் 2 ஆள் யார் என்று அடை­யா­ளப்­ப­டுத்­து­கி­றீர்கள் என வைத்துக் கொண்டால் அத­னையும் அடை­யா­ளப்­ப­டுத்­திய பின்னர் 3 ஆவது ஆள் யார் என்று அடை­யா­ளப்­ப­டுத்­தலாம்.

ஆகவே நீங்கள் 1, 2, 3 என உங்­க­ளது விருப்பு வாக்­கு­களை இம்­முறை தெரி­விக்­கலாம். முக்­கி­ய­மாக கவ­னிக்க வேண்­டி­யது என்­ன­வெனில் 1 ஐ எழு­தாமல் 2, 3 என்று மட்டும் எழு­தினால் அந்த வாக்குச் சீட்டு செல்­லாது போகலாம்.

கட்­டாயம்1 எழு­தப்­பட வேண்டும். அதன் பின்­னரே 2, 3 எழு­தப்­பட வேண்டும்.

இது சிக்­க­லான விடயம் எனக் கண்டால் நீங்கள் விரும்­பு­கிற ஆளுக்கு x ஒன்றை மட்டும் இட்டு உங்­க­ளது விருப்பை தெரி­விக்­கலாம்.

மேலும் கவ­னிக்க வேண்­டி­ய­தொரு விடயம், 1, 2, 3 க்கு மேல் 4, 5, 6 என்று எழு­தி­யி­ருந்தால் அந்த வாக்குச் சீட்டு செல்­லு­ப­டி­யா­காமல் போகலாம்.

ஆகவே ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­க­ளிக்கும் முறை பற்றி மிக முக்­கி­ய­மாக தெரிய வேண்­டிய விடயம் வாக்­காளர் தனது வாக்குச் சீட்டில் x இடலாம். அல்­லது 1, 2, 3 என அடை­யாளம் இடலாம் என்­ப­தாகும்.

வாக்கு எண்­ணு­தலில் யார் ஒருவர் 50+ 1% வாக்கை பெறு­கி­றாரோ அவரே ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டு­கிறார் என்­பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் ஏன் 2, 3 என்ற விருப்­பு­ரிமை வாக்­குகள் அளிக்­கப்­ப­டு­கின்­றன என்­பதை வாச­கர்கள் அறிய வேண்டும். ஏனெனில் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஒருவர் வெற்­றி­ய­டைய 50% + 1 வாக்கை பெற வேண்டும். அதா­வது அளிக்­கப்­பட்ட வாக்­கு­களில் 50% + 1 வீதத்தை ஒருவர் பெறா­விட்டால் அவர் வெற்றி பெற்­ற­வ­ராக கரு­தப்­ப­ட­மாட்டார். ஆகவே அபேட்­சகர் யாரும் 50% வாக்­கு­களை பெறா­விட்டால் என்ன நடக்கும் என்­பதை பார்ப்போம்.

19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தமும் ஜனாதி­ப­தியும்

1978 ஆம் ஆண்டு மூல அர­சியல் அமைப்பில் 30 ஆம் பிரிவு பின்­வ­ரு­மாறு இருந்­தது.

30 (1) இலங்கை குடி­ய­ர­சுக்கு ஜனாதி­பதி ஒருவர் இருத்தல் வேண்டும். அவரே அரசின் தலை­வரும், ஆட்சித் துறை­யி­னதும் அர­சாங்­கத்தின் தலை­வரும் ஆயுதங் தாங்­கிய படை­களின் தலை­வ­ரு­மாவார்.

2) குடி­ய­ரசின் ஜனாதி­பதி மக்­க­ளினால் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டுதல் வேண்டும். அவர் ஆறு ஆண்­டுகள் கொண்­ட­தொரு தவ­ணைக்குப் பதவி வகித்தல் வேண்டும் என்றும் இருந்­தது. இப்­பி­ரிவு 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பின் திருத்­தத்­தினால் மாற்­றப்­பட்­டுள்­ளது.

30 (1) ல் மாற்­ற­மில்லை.

30 (2) மாற்றம் உள்­ளது. அதன்­படி அத்­திருத்தம் பின்­வ­ரு­மாறு அமைந்­துள்­ளது.

“குடி­ய­ரசின் ஜனா­தி­பதி மக்­க­ளினால் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டுதல் வேண்­டு­மென்­ப­துடன் ஐந்து ஆண்­டுகள் கொண்ட ஒரு காலப் பகு­திக்குப் பதவி வகித்­தலும் வேண்டும்” என்று மாற்­றப்­பட்­டுள்­ளது.

ஆகவே தற்­போ­தைய ஜனாதி­ப­தியின் காலமும், இனி­வ­ரப்­போ­கிற ஜனாதி­ப­தியின் காலமும் 5 ஆண்­டு­களே பதவி வகிக்க முடியும்.

1978 ஆம் ஆண்டு மூல அர­சி­ய­ல­மைப்பில் 31 (1) அப்­ப­டி­யே­யுள்­ளது. ஆனால் 31 (2) ஆம் பிரிவு மாற்­றப்­பட்­டுள்­ளது. அதன்­படி அத்­தி­ருத்தம் பின்­வ­ரு­மாறு உள்­ளது.

“ஜனாதி­பதிப் பத­விக்கு மக்­களால் இரு­முறை தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட ஆள் எவரும் அதன் பின்னர் அத்­த­கைய பத­விக்கு மக்­களால் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வ­தற்கு தகு­தி­யற்­ற­வ­ராவார்” என்று மாற்­றப்­பட்­டுள்­ளது.

1978 ஆம் ஆண்டு மூல அர­சியல் அமைப்பில் கூறப்­பட்­டுள்ள பதவி வகிக்கும் காலம் இரு­முறை என்­ப­தாகும். 19 ஆம் அர­சி­ய­ல­மைப்­பிலும் பதவி வகிக்கும் காலம் இரு­முறை என்­ப­தே­யாகும்.

ஆகவே இவ்­வி­டத்தில் எழு­கிற கேள்வி என்­ன­வெனில் ஏன் 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பில் மூல அர­சியல் அமைப்பில் உள்ள காலப் பகு­தியை மீண்டும் கூற வேண்­டிய தேவை ஏன் ஏற்­பட்­டது என்­ப­தாகும்.

அர­சியல் அமைப்பின் 18 ஆவது அர­சியல் சீர்­தி­ருத்­தத்தில் 1978 ஆம் ஆண்டு மூல அர­சி­ய­ல­மைப்பில் இருந்த இரண்டு தடவை என்­பது பின்­வ­ரு­மாறு மாற்­றப்­பட்­டது.

1978 ஆம் ஆண்டு மூல அர­சி­ய­ல­மைப்பில் கூறி­யுள்­ள­படி ஜனா­தி­பதி பத­விக்கு போட்­டி­யி­டு­பவர் இரண்டு தட­வைக்கு மேல் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டா­த­வ­ராக இருக்க வேண்டும் என்­பது 18 ஆவது அர­சியல் அமைப்பு சீர்­தி­ருத்­தத்தில் பின்­வ­ரு­மாறு மாற்­றப்­பட்­டது” ஒருவர் எத்­தனை முறை வேண்­டு­மா­னாலும் ஜனா­தி­பதி பத­விக்கு போட்­டி­யி­டலாம் என மாற்­றப்­பட்­டது. ஆகவே அந்த 18 ஆம் அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்தை நீக்­கவே 19 ஆவது அர­சியல் அமைப்பு சீர்­தி­ருத்­தத்தில் இது மீண்டும் மாற்­றப்­பட்டு கூறப்­பட்­டுள்­ளது.

ஜனாதி­பதி ஒருவர் பத­வியில் இருக்­கும் போது இறந்தால் என்ன நடக்கும்?

அர­சியல் அமைப்பின் 40 (1) அ பிரிவு பின்­வ­ரு­மாறு கூறு­கி­றது.

“ஜனாதி­ப­தியின் பதவி அவ­ரது பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்கு முன்­பாக வறி­தா­கினால் பாரா­ளு­மன்றம், ஜனா­தி­பதி என்ற பத­விக்குத் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வ­தற்குத் தகை­மை­யு­டை­ய­வராய் உள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரை ஜனாதி­ப­தி­யாகத் தேர்ந்­தெ­டுத்தல் வேண்டும். ஜனா­தி­பதிப் பத­விக்கு சவால் விடுக்­கின்ற ஆள் எவரும் பத­வியை வறி­தாக்கிச் செல்லும் ஜனாதி­ப­தியின் பதவிக் காலத்தில் முடி­வு­றாது எஞ்­சி­யுள்ள காலத்­துக்கு மட்­டுமே பதவி வகித்தல் வேண்டும்” என்­கி­றது.

1993 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதி ஜனா­தி­ப­தி­யாக இருந்த ஆர். பிரே­ம­தாச மர­ண­ம­டைந்தார். அவ்­வி­டத்­திற்கு அப்­போது பிர­த­ம­ராக இருந்த டி.பி. விஜ­ய­துங்க   ஜனாதி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்டார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இவர் 1994 ஆம் ஆண்­டு­வரை பத­வியில் இருந்தார். பின்னர் 1994 இல் ஜனா­தி­பதித் தேர்தல் நடந்­தது. அதில்  விஜ­ய­துங்க   போட்­டி­யி­ட­வில்லை. அர­சி­யலில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஜனா­தி­பதி இறந்த நேரத்தில் முத­ல­மைச்சர் பதவி வறி­தாக இருந்தால் அல்­லது முத­ல­மைச்சர் பதிற் கட­மை­யாற்­று­வ­தற்கு இய­லா­த­வ­ராக இருப்­பா­ராயின் ஜனா­தி­பதி என்ற பத­வியில் சபா­நா­யகர் பதில் கட­மை­யாற்­றுதல் வேண்டும்.

ஜனா­தி­பதி ஆட்­சிக்கு சார்­பா­னதும் எதி­ரா­ன­து­மான கருத்­துக்கள் சில

ஜனா­தி­பதி ஆட்­சிக்கு சார்­பா­னதும் எதி­ரா­ன­து­மான கருத்­துக்கள் பல. ஆயினும் இக்­கட்­டுரை நீளு­வதால் அவற்றில் சில­வற்றை மட்டும் கூறு­கிறேன்.

நன்­மைகள்

1) இலங்­கையில் நிலை­யா­னதும் பல­மா­ன­து­மான ஆட்சி நடை­பெற வேண்­டு­மாயின் நிரு­வாகம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் நலன்­களை முக்­கி­ய­மாக தெரி­விக்­கின்ற சட்­டத்­துறை உறுப்­பி­னர்­களின் நலன்­களை மட்டும் கவ­னிப்­ப­தாக இல்­லாமல் மக்­களின் நலனை கவ­னிப்­ப­தாக இருக்க வேண்­டு­மானால் நிரு­வா­கத்­திற்கு என ஒரு ஜனாதி­பதி இருத்தல் வேண்டும் என்ற தத்துவத்தை ஜனாதிபதி ஆட்சி நிறைவேற்றுகிறது.

2) ஜனாதிபதி பதவிக்கு பொது மக்கள் சகலரும் வாக்களித்து தெரிவு நடை பெறுவதால் ஜனாதிபதி பதவியவர்களை ஒரு குறித்த இனத்தினதும் மதத்தினதும் அல்லது பகுதியினது ஜனாதிபதியாக மட்டும் இருக்க முடியாது. முழு இலங்கைக்கும் பொதுவானவராக கருதப்படுவார். இன, மத ஒற்றுமைக்கு இப்பதவி ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகிறது.

3) அவசர தீர்மானங்களை எடுக்கவும் அவற்றை செயற்படுத்தவும் சிறு இன மதத்தவரின் கோரிக்கைகளை கவனிக்கவும் ஜனாதிபதி ஆட்சி உதவுகிறது.

தீமைகள்

1) ஜனாதிபதியும் பாராளுமன்ற அங்கத்தவர்கள் பொது மக்களால் தெரிவு செய்யப்படுவதால் கட்சி ரீதியில் அத்தெரிவு அமையுமாயின் வெவ்வேறு கட்சியில் சேர்ந்தவர்கள் தெரிபட்டால் நாட்டின் அபிவிருத்திக்கும் மற்றும்  செயற் பாடுகளுக்கும் அந்த ஜனாதிபதிமுறை பாதகமாக அமையும்.

2) அரசியலமைப்பின்படி கட்சி ரீதியாக ஆட்சியமைவதால் நாட்டில் குழப்பம் நிலவ இடமுள்ளது.

தொகுப்புரை

இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் சகலரும் படித்தறியக் கூடியவாறு எழுதப்­பட்டுள்ளது. ஆயினும் உங்களுக்கு தேர்தல் சம்பந்தமாக விநியோகிக்கப்படும் ஆவணங்களை கவனமாக படித்து அதன்படி உங்களது வாக்கை அளிக்க வேண்டும்.

விசேடமாக ஜனாதிபதி தேர்தல் தவிர ஏனைய தேர்தல்களில் நாம் X யிட்டே எமது விருப்பத்தை தெரிவிக்கிறோம். ஆகவே பாமரமக்கள் 1, 2, 3 என எழுதுவது பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். அவர்கள் கவனமாக தேர்தல் திணைக்களத்தால் அல்லது வேறு நிறுவனங்களால் வெளியிடப்படும் விபரங்களையும் படித்துப் பார்க்க வேண்டும்.

இம்முறை தேர்தல் மிக முக்கியமானது என எல்லோரும் கூறுகிறார்கள். ஆகவே அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நீங்கள் வாக்களிக்க ஒருவர் அல்லது இருவர் கூறுவதை மட்டும் மனதில் எடுக்காமல் பலவற்றையும் படித்து மனதில் எடுத்து வாக்களிக்க வேண்டும் நல்லாட்சிக்கு அதுவே தேவையாகும்.

தேர்­தலில் விருப்பு வாக்­குகள் பெறும்இடம்

ஜனா­தி­பதித் தேர்­தலில் A, B, C, D என 4 பேர் போட்­டி­போ­டு­கின்­றனர் என எடுப்போம். தேர்­தலில் ஒரு­வரும் 50% த்திற்கு மேற்­பட்ட வாக்­கு­களை ஒரு­வரும் முத­லா­வது கணிப்பில் பெற­வில்லை எனவும் எடுப்போம். அவர்­களில் A, B யே கூடு­த­லான வாக்­கு­களை பெற்­றுள்­ளனர் எனவும் எடுப்போம்.

இச்­சந்­தர்ப்­பத்தில் C, D போட்­டியில் இருந்து தவிர்க்­கப்­ப­டு­வார்கள். மற்­றைய A, B இரு­வ­ருமே போட்­டிக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­டுவர்.

நீக்­கப்­பட்­ட­வர்­களின் வாக்குச் சீட்­டுக்­களில் (CD யில்) காணப்­ப­டு­கின்ற இரண்­டாது விருப்பு வாக்­குகள் வாக்கின் கணிப்­பிற்­காக மேலே கூறிய A,B யின் வாக்­கு­க­ளுடன் சேர்க்­கப்­படும். அப்­போதும் AB க்கு அறுதிப் பெரும்­பான்மை கிடைக்­க­வில்­லை­யாயின் நீக்­கப்­பட்ட C,D யின் மூன்றாம் விருப்புத் தெரி­வுகள், A, B யுடன் சேர்த்துக் கொள்­ளப்­படும். அப்­போதும் அறுதிப் பெரும்­பான்மை கிடைக்­காத பட்­சத்தில் திரு­வுள சீட்டின் மூலம் ஜனாதி­ப­தி­யா­னவர் தெரிவு செய்­யப்­ப­டுவார். இவ்­வாறே ஜனா­தி­பதி ஒருவர் இலங்­கையின் ஜனாதி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டு­கிறார். மேலே­யுள்ள முறை­யி­லேயே ஜனாதி­பதி ஒருவர் தெரிவு செய்­யப்­ப­டு­கிறார்.

இலங்­கையில் இவ்­வாறு விருப்பு வாக்­குகள் சேர்க்­கப்­பட்டு ஜனாதி­ப­தி­யாக யாரும் தெரிவு செய்­யப்­ப­ட­வில்லை. முதல் வாக்கு கணிப்­பி­லேயே அவர்கள் ஜனாதி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டனர்.

ஆகக் கூடு­த­லான வாக்கை பெற்­றவர் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க ஆவார். அவ­ரது வாக்கு வீதம் 62.2 வீதமாக இருந்­தது. ஆகக் குறைந்த வாக்கை பெற்று தெரிவு செய்­யப்­பட்­டவர் மஹிந்த ராஜபக் ஷவாகும். அவ­ரது வாக்கு வீதம் முதல் தடவை 50.4 வீதமாகவும் இரண்­டா­வது தடவை 50.3 வீதமா­கவும் இருந்தது.

கே.ஜீ.ஜோன்
(சட்டத்தரணியும் ஆய்வாளரும் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13