ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவும்

Published By: Daya

16 Oct, 2019 | 11:06 AM
image

தமிழ்த்­த­ரப்பு நோக்கு நிலையில் நவம்பர் மாத ஜனா­தி­பதி தேர்தல் மூன்று நிலை­களில் அர­சியல் ரீதி­யான கொள்கை நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கின்­றது. இந்த மூன்று நிலை­களும் தேர்தல் களத்தில் தீவி­ர­மாக முட்டி மோதி முடி­வு­களை வெளிப்­ப­டுத்தக் காத்­தி­ருக்­கின்­றன.

அந்த முடி­வு­களும் அதன் பின்­ன­ரான விளை­வு­களும் இலங்­கையின் அடுத்த கட்ட அர­சியல் நிலை­மை­களில் பெரும் தாக்­கத்தைச் செலுத்தப் போகின்­றன. அதற்­கான அறி­கு­றி­களை தேர்­த­லுக்கு முன்­ன­ரான நிலை­மைகள் வெளிப்­ப­டுத்தியுள்­ளன. இந்தத் தாக்­கங்கள் நாட்டின் எதிர்­கால நிலை­மை­களைப் பிர­கா­ச­மாக்கும் என்று கூற முடி­யா­துள்­ளது.

ஜனா­தி­பதித் தேர்­தலில் வேட்­பா­ளர்­க­ளாகக் கள­மி­றங்­கி­யுள்ள மூன்று முக்­கிய வேட்­பா­ளர்­களின் போக்கும் அவர்கள் சார்ந்த கட்­சிகள் கொண்­டுள்ள அர­சியல் நிலைப்­பாடும் ஓர் அம்­ச­மாகும். தேர்­தலில் வெற்றி பெற வேண்டும் என்­ப­தற்­காக அவர்­க­ளி­டையே ஏற்­பட்­டுள்ள அர­சியல் போட்டி சார்ந்த அணு­கு­மு­றைகள், கொள்கை நிலைப்­பா­டுகள் என்­பன இந்த முத­லா­வது அம்­சத்தில் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றன.

தேர்­தலில் வெற்­றி­பெற்றால் தாங்கள் என்­னென்­ன­வற்றைச் செய்வோம் என்­பது குறித்து பிர­தான வேட்­பா­ளர்­களும் அவர்கள் சார்ந்த அர­சியல் கட்­சி­களும் வெளி­யிட்டு வரு­கின்ற கருத்­துக்கள் நாட்டின் எதிர்­கால நிலை­மைகள் குறித்து கோடி காட்­டு­வ­ன­வாக அமைந்­தி­ருக்­கின்­றன.

நல்­லி­ணக்­கத்­துடன் கூடிய நாட்டு மக்­களின் ஐக்­கியம், முன்­னேற்றம் தொடர்­பி­லான உத்­தேசத் திட்­டங்கள் நாட்டின் எதிர்­கா­லத்­துக்கு எந்த அள­வுக்குப் பய­னுள்­ள­தாக இருக்கும் என்­பது சந்­தே­கத்­துக்கும் கேள்­விக்கும் உரி­ய­வை­யா­கவே இருக்­கின்­றன.

ஜனா­தி­பதித் தேர்தல் என்­பது நாட்டின் அதி­யுயர் அர­சியல் தலை­வரை நாட்டு மக்கள் அனை­வரும் நேரடி வாக்­க­ளிப்பின் மூலம் தெரிவு செய்­வ­தாகும். நாடு முழு­வதும் ஒரே­யொரு தேர்தல் தொகுதி என்ற அடிப்­ப­டையில் இந்த வாக்­க­ளிப்பு மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. இந்த வகையில் நாட்டு மக்கள் அனை­வ­ராலும் தெரிவு செய்­யப்­ப­டு­கின்ற மக்கள் தலை­வ­ரா­கவே ஜனா­தி­பதி திகழ வேண்டும். செயற்­ப­டவும் வேண்டும்.

ஆனால் இங்கு நிலைமை அவ்­வா­றில்லை. மக்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து தெரிவு செய்­கின்ற ஒரு­வ­ரா­கிய போதிலும், இது­கால வரை­யிலும் ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகித்­த­வர்கள் பெரும்­பான்மை இன மக்­களின் நலன்­க­ளையும் சிங்­கள பௌத்த தேசி­யத்­துக்கு உர­மூட்­டு­ப­வர்­க­ளா­க­வுமே செயற்­பட்­டுள்­ளார்கள்.

தாங்கள் பெரும்­பான்மை இன மக்­களைப் போலவே, சிறு­பான்மை இன­மக்­க­ளி­னதும் ஜனா­தி­பதி என்­பதை அவர்கள் உணர்ந்து செயற்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை. பெரும்­பான்மை இன மக்­க­ளுக்கு விசு­வா­ச­மா­கவும், அவர்­களின் நலன்கள், முன்­னேற்­றத்தில் அக்­கறை கொண்­டி­ருந்­தது போல சிறு­பான்மை இன மக்­களின் நலன்கள் அவர்­க­ளது முன்­னேற்­றத்­திலும் சம­மான அக்­க­றை­யோடும் பொறுப்­பு­ணர்­வோடும் செயற்­ப­ட­வில்லை.

நாட்டு ஜனா­தி­ப­தி­களின் இந்தப் போக்கு ஓர் அர­சியல் மர­பு­வழிப் போக்­கா­கவே கடைப்­பி­டிக்­கப்­பட்டு வந்­துள்­ளது. இதனால் புரை­யோடிப்போயுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண்­பது முயற்­கொம்­பாகியுள்­ளது. இனங்­க­ளுக்­கி­டையில் அர­சியல் ரீதி­யான நல்­லு­ற­வையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஐக்­கி­யத்­தையும் உரு­வாக்­கு­கின்ற கைங்­க­ரியம் தோல்வி கண்­டுள்­ளது.

அனைத்து மக்­க­ளி­னதும் தலை­வ­ராகக் கரு­தப்­ப­டு­கின்ற ஜனா­தி­பதி தேசிய அர­சியல் வெளியில் ஓர் உன்­னத நிலையில் தேசியத் தலை­ம­க­னாக உரு­வாக முடி­யாமல் போயுள்­ள­மைக்கும் இந்த மர­பு­வ­ழி­யி­லான அர­சியல் போக்கே கார­ண­மா­கி­யுள்­ளது.

எனவே, இத்­த­கைய முன்­னு­தா­ர­ணத்தைக் கொண்­டுள்ள ஜனா­தி­பதி பத­விக்­கான தேர்­தலில் வெற்றி பெறப்­போ­கின்­ற­வரும் புதிய வழியில் தனது அர­சியல் பய­ணத்தை மேற்­கொள்­வாரா என்­பதைக் கற்­பனை செய்­து­கூட பார்க்க முடி­யாத நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது.

19ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தச் சட்­டத்தின் மூலம் நிறை­வேற்று அதி­காரம் வெட்­டிக்­கு­றைக்­கப்­பட்­டுள்ள முத­லா­வது ஜனா­தி­ப­திக்­கான இந்தத் தேர்­தலில் வெற்றி பெறு­கின்­றவர் தான் விரும்­பி­ய­வற்றைச் செயற்­ப­டுத்த முடி­யாத ஒரு­வ­ரா­கவே இருக்கப் போகின்றார். அத்­த­கைய அர­சியல் தலைவர் ஒருவர் நாட்டின் ஐக்­கி­யத்­தையும் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்கம், நல்­லு­ற­வையும் கட்­டி­யெ­ழுப்ப முடி­யுமா என்­பதும் சந்­தே­கத்துக்கு உரி­யதே.

ஆனால் இந்தப் பத­விக்கே வர­லாற்றில் ஒரு­போதும் இல்­லாத வகையில் 35 வேட்­பா­ளர்கள் களத்தில் போட்­டி­யிடத் துணிந்­துள்­ளார்கள். இந்த அர­சியல் அணு­கு­முறை எத்­த­கை­யது என்­பது புரி­யாத புதி­ராக உள்­ளது.

பிர­தான வேட்­பா­ளர்கள் எவரும் இந்த நாட்டின் அர­சியல் ஸ்திரத்­தன்­மைக்குக் குந்­த­க­மாக உள்ள இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும் என்­பதை வெளிப்­ப­டை­யாக ஏற்­றுக்­கொள்ளக் கூடி­ய­வர்­க­ளாக இல்லை.

அந்­நி­ய­ரிடமிருந்து நாடு சுதந்­திரம் பெற்­றது முதல் சம அர­சியல் உரி­மைக்­கான தமது அர­சியல் அபி­லா­ஷை­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­காகப் போராடி வரு­கின்ற சிறு­பான்மை தேசிய இன மக்­களின் அர­சியல் மன நிலையைச் சரி­வர புரிந்து கொள்­ப­வர்­க­ளா­கவும் இல்லை.

வேட்­பா­ளர்கள் மட்­டு­மல்­லாமல் அவர்கள் சார்ந்­துள்ள அர­சியல் கட்­சி­களும் அவற்றின் தலை­வர்கள் உள்­ளிட்ட அர­சி­யல்­வா­தி­களும் தமது கொள்கை நிலைப்­பாட்டில் இத்­த­கைய போக்­கையே கொண்­டி­ருக்­கின்­றார்கள். இது சோக­மா­னது, கவ­லைக்­கு­ரி­யது.

30 வரு­டங்­க­ளாகத் தொடர்ந்த யுத்தம் முடி­வுக்கு வந்து 10 வரு­டங்கள் கழிந்­து­விட்­டது. இருப்­பினும் அந்த யுத்தம் மூள்­வ­தற்கு மூல­கா­ர­ண­மாக உள்ள இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வின் மூலம் தீர்வு காணப்­பட வேண்­டிய அதி­முக்­கிய அர­சியல் தேவையை அவர்கள் உணர்ந்­தி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

உணர்ந்­தி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை என்­ப­திலும் பார்க்க, தேசிய மட்­டத்­தி­லான அந்த அர­சியல் தேவையை உணர்ந்தும் உண­ரா­த­வர்­க­ளாகக் காட்­டிக்­கொண்டு சுய கட்சி அர­சியல் இலா­பத்தை மட்­டுமே இலக்­காகக் கொண்டு செயற்­ப­டு­வ­தி­லேயே அவர்கள் குறி­யாக இருக்­கின்­றார்கள்.

சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­று­வ­திலும் பார்க்க, அவர்­களை பெரும்­பான்மை இன மக்­க­ளுக்கு எதி­ரான அர­சியல் போக்­கிற்கு எதி­ரா­ன­வர்கள் என அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தி­லேயே அவர்கள் கவ­ன­மாக இருக்­கின்­றார்கள். இந்த இன­வாதப் போக்­கையே தமது தேர்தல் கால முத­லீ­டாகச் செயற்­ப­டுத்தி பெரும்­பான்மை இன மக்­களின் வாக்­கு­களைக் கவர்­வ­தி­லேயே அவர்­க­ளு­டைய கவனம் குவிந்­துள்­ளது.

அதே­நேரம் தேசிய மட்­டத்­தி­லான இந் தத் தேர்­தலில் சிறு­பான்மை இன மக்­களின் வாக்­கு­க­ளையும் பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்ற வெளிப்­ப­கட்­டான அர­சியல் தேவை­யையும் அவர்கள் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அதற்­காக கப­டத்­த­ன­மான அர­சியல் போக்கில் பச்­சோந்தி தனமாக வாக்­கு­று­தி­களை அள்­ளி­வீசி, சிறு­பான்மை இன மக்­களின் மனங்­களில் அர­சியல் ரீதி­யாக இடம்­பி­டிப்­ப­தற்­கான முயற்­சி­க­ளிலும் அவர்கள் தயக்­க­மின்றி ஈடு­பட்­டி­ருக்­கின்­றார்கள்.

தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுக்­கின்ற விவ­கா­ரத்­திலும், இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­கின்ற விட­யத்­திலும் பேரின அர­சியல் தலை­வர்­களும், அர­சி­யல்­வா­தி­களும் விடாக்­கண்டன் கொடாக்­கண்டன் போக்­கையே கடைப்­பி­டித்து வரு­கின்­றனர். இதனால் அர­சியல் தீர்வு, தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷைகள் என்­பன­வற்றைப் பெற்­றுக்­கொள்­வதில் கல்லில் நார் உரிக்­கின்ற நிலை­மைக்கே தமிழ் அர­சியல் தரப்பு தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது.

இந்தக் கடு­மை­யான பேரின அர­சியல் நிலைப்­பாட்டை எதிர்­கொள்­வ­தற்கு தமிழ் மக்கள் அனை­வரும் ஓர் அர­சியல் கட்­ட­மைப்பின் கீழ் ஒன்­றி­ணைந்­தி­ருக்க வேண்­டிய தேவை தவிர்க்க முடி­யா­த­தாகத் தொடர்­கின்­றது. தமிழ் மக்கள் மத்­தியில் வேர்­பாய்ந்­துள்ள அர­சியல் கட்­சி­களும் அர­சியல் தீர்வு, அர­சியல் அபி­லாஷை என்ற இலக்கை நோக்­கிய பய­ணத்தில் ஓர் அணியில் செயற்­பட வேண்­டி­ய­வை­க­ளா­கவே இருக்­கின்­றன.

இந்த அர­சியல் யதார்த்­தத்தைத் தமிழ் மக்கள் உணர்ந்­துள்­ள­போ­திலும், உளப்­பூர்­வ­மாக தமிழ் அர­சியல் கட்­சிகள் உண­ர­வில்லை என்றே கூற வேண்டும். தமிழர் தரப்பின் அர­சியல் ரீதி­யான ஒற்­று­மையும் ஓர­ணியில் திரண்ட செயற்­பா­டுமே பேரி­ன­வாதப் போக்­கையும் சிங்­கள பௌத்த தேசிய அணு­முறை அர­சி­ய­லையும் எதிர்­கொள்­வ­தற்கு அவ­சியம் என்ற உண்­மையை தொடர்ச்­சி­யான பல சம்­ப­வங்கள் உணர்த்­தி­யி­ருக்­கின்­றன.

ஆனாலும் அந்த உண்­மையை உணர்ந்து அர­சியல் யதார்த்த நிலை­மைக்கு ஏற்­ற­வாறு செயற்­ப­டு­வ­தற்குத் தமிழ் அர­சியல் கட்­சிகள் யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில்  ஆக்­க­பூர்­வ­மான முறையில் செயற்­ப­ட­வில்லை. அவ்­வாறு செயற்­ப­டு­வ­தற்கு அனைத்துத் தரப்­பி­னரும் முழு அளவில் முயற்­சிக்­க­வு­மில்லை.

தமிழ்த்­தே­சி­யத்தை அடிப்­படை கொள்­கை­யாக வரித்துக்கொண்டு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்குள் இணைந்­தி­ருந்த கட்­சி­களும்கூட தமக்­கி­டை­யி­லான ஒன்­றி­ணைந்த செயற்­பாட்டு நிலையைத் தொடர்ந்து பேண முடி­ய­வில்லை. அந்தக் கூட்டில் இருந்து கட்­சிகள் ஒவ்­வொன்­றாகப் பிரிந்து சென்று உதி­ரி­க­ளாகச் செயற்­ப­டு­கின்ற வழி­மு­றை­களே தொடர்ந்து இடம்­பெற்று வரு­கின்­றன. இதன் கார­ண­மா­கவே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு தற்­போது மூன்று கட்­சி­க­ளாகச் சுருங்­கி­யுள்­ளது.

இந்த சுருக்­கத்­திற்­குள்­ளேயும் ஒன்­றி­ணைந்த செயற்­பாட்டை முன்­னெ­டுப்­பதில் அர­சியல் ரீதி­யான பிடுங்­கு­பா­டு­க­ளி­லேயே காலத்தைக் கழித்து வந்­துள்­ளன. கூட்­ட­மைப்பிலிருந்து வெளி­யே­றிய கட்­சி­க­ளும்­கூட தங்­க­ளுக்குள் ஒன்­று­பட்டு ஓர் அணியை உரு­வாக்­கவோ அல்­லது ஒன்­றி­ணைந்து செயற்­ப­டவோ முடி­யாத நிலை­யி­லேயே திகைத்து நிற்­கின்­றன.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கு மாற்­றாக ஓர் அர­சியல் அணியை உரு­வாக்க வேண்டும் என்ற வேண­வாவைக் கொண்­டி­ருக்­கின்ற கட்­சி­க­ளும்­கூட தமக்குள் ஒன்­றி­ணைந்து ஓர் அர­சியல் தலை­மையை உரு­வாக்கிக் கொள்ள முடி­ய­வில்லை. இதற்குத் துணை­பு­ரி­வ­தற்­காகத் தோற்றம் பெற்ற தமிழ் மக்கள் பேர­வை­யும்­கூட இந்தக் கைங்­க­ரி­யத்தில் தோல்­வி­யையே தழு­விக்­கொண்­டது.

ஆயினும் 8ஆவது ஜனா­தி­பதித் தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்கு தமிழ்த்­தே­சி­யத்தை அடிப்­படைக் கொள்­கை­யாகக் கொண்ட கட்­சி­களை ஒன்­றி­ணைப்­ப­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட சுயா­தீனக் குழுவும் தமிழ் அர­சியல் கட்­சி­களை ஒன்­றி­ணைக்க முடி­யாமல் தோல்­வியில் சுருண்­டது. தமிழ் அர­சியல் கட்­சி­களை ஒரு மேசையில் கூட்டி, ஓர் இணக்­கப்­பாட்டை எட்­டு­வ­தற்­கான ஒன்­றி­ணைக்கும் பணியை முன்­னெ­டுப்­ப­தற்­கா­கவே அந்தக் குழு ஆரம்­பிக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­பட்­டது. ஆனால், ஜனா­தி­பதித் தேர்­தலில் ஒரு பொது வேட்­பா­ளரை நிறுத்தி தேர்­தலை எதிர்­கொள்­வதைப் பற்றி அது கவனம் செலுத்­தி­யதன் மூலம் திசை­மாறிச் சென்­ற­தாகக் குறை கேட்க வேண்­டிய நிலை­மைக்கு ஆளா­கிப்­போ­னது.

தமிழ் அர­சியல் கட்­சி­களை ஒன்­றி­ணைக்கும் அந்த கைங்­க­ரி­யத்தின் தொடர்ச்­சி­யாக வடக்கு–கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கங்­களின் மாணவர் ஒன்­றியம் முன்­னெ­டுத்த முயற்சி வெற்றி அளித்­துள்­ளது. தமி­ழ­ரசுக் கட்சி, புளொட், ஈ.பி­.ஆர்­.எல்.எவ். ரெலோ, தமிழ் மக்கள் கூட்­டணி, தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­னணி ஆகிய ஆறு கட்­சி­களை ஒன்­றி­ணைத்து ஓர் அணியில் செயற்­படச் செய்­வ­தற்­காக மாணவர் ஒன்­றியம் மேற்­கொண்ட முயற்­சியில் கஜேந்­தி­ர­குமார் தலை­மை­யி­லான தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­னணி பின்­ன­டித்­து­விட்­டது.

இதனால் ஏனைய ஐந்து கட்­சி­களும் ஓர் அணி­யாக ஒன்­றி­ணைந்து சில முக்­கி­ய­மான நிபந்­த­னை­க­ளுக்கும் கொள்­கைகள் கோரிக்­கை­க­ளுக்கும் கட்­டுப்­பட்டு ஒரு புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டி­ருக்­கின்­றன.

தமிழ் அர­சியல் கட்­சி­களின் இந்த ஒன்­றி­ணைவு தமிழ் அர­சியல் வெளியில் ஒரு வெற்­றி­க­ர­மான நிகழ்­வாக சிலா­கிக்­கப்­ப­டு­கின்­றது. இருப்­பினும் இதனை ஒரு வெற்­றி­கரச் செயற்­பாடு என்­ப­திலும் பார்க்க ஒரு முன்­னேற்ற நகர்­வாகக் கொள்­வதே பொருத்­த­மா­ன­தாக இருக்கும். உதி­ரி­க­ளாகச் சித­றிக்­கி­டக்­கின்ற தமிழ் அர­சியல் தரப்பை ஒன்­றி­ணைப்­பது என்றால், அனைத்துத் தமிழ் அர­சியல் கட்­சி­க­ளையும் ஓர் அணியில் ஒன்­றி­ணைப்­ப­தையே முழுமை பெற்ற செயற்­பா­டாகக் கருத முடியும். ஒரு வெற்­றி­க­ர­மான செயற்­பா­டாகக் கொள்ள முடியும்.

இங்கு தமிழ்த்­தே­சி­யத்தை அடிப்­படைக் கொள்கை நிலை­யாகக் கொண்டு ஏற்­க­னவே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் இணைந்­தி­ருந்து பிரிந்து சென்ற கட்­சி­க­ளையே ஒன்­றி­ணைக்­கின்ற பணி மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது. ஒத்த கொள்கை உடை­ய­வர்கள் தாரா­ள­வாத நிலையில் ஏன் ஒன்­றி­ணைந்து செயற்­பட முடி­யாது என்­பது ஒரு முக்­கி­ய­மான கேள்வி.

ஒத்­துழைத்துச் செயற்­ப­டு­வ­தற்கு ஒத்த தன்­மை­யி­லான கொள்­கை­களைக் கொண்ட கட்­சி­க­ளி­டையே பிரி­வி­னைக்­கான காரணம் என்ன என்­பதும் ஆழ­மாகச் சிந்­திக்க வேண்­டிய விடயம். அர­சியல் கட்­சி­களின் நன்­மை­யையும், அவற்றின் இருப்­பையும் கருத்திற்கொண்ட இறுக்­க­மான அர­சியல் போக்கே ஒத்த கொள்­கை­களைக் கொண்­டி­ருக்­கின்ற போதிலும் மக்­க­ளுக்­காக ஒன்­றி­ணைய முடி­யாமல் போயுள்­ளது. மக்­க­ளுக்­காக ஒன்­றி­ணைந்து செயற்­பட முடி­யாமல் போனது.

காலப்­போக்கின் அர­சியல் நிலை­மை­க­ளையும் பேரி­ன­வாத அர­சியல் தரப்பின் கடும்­போக்­கையும் கருத்­திற்­கொண்டு விட்­டுக்­கொ­டுப்­புடன் செயற்­ப­டு­வ­தற்குத் தயாராகாத வரையில் தமிழ் அர­சியல் கட்­சி­களின் ஒன்­றி­ணைவும் தாரா­ள­வாத ஒரு­மித்த செயற்­பாடும் வெற்­றி­ய­ளிக்­க­மாட்­டாது.

ஏற்­க­னவே குறிப்­பிட்­டதுபோல தமிழ் அர­சியல் தரப்பின் எதிர்த்­த­ரப்­பா­கிய பேரின அர­சியல் சக்­தி­க­ளிடம் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தென்­பது கல்லில் நாரு­ரிக்­கின்ற காரி­யத்­துக்கு ஒப்­பான கைங்­க­ரி­ய­மாகும். கல்லில் நாரு­ரிக்கச் செல்­ப­வர்கள் தங்­க­ளுக்குள் இறுக்­க­மான பிடிப்­பு­டை­ய­வ­ர்­க­ளாக இருப்­பது அவ­சியம். இறுக்­க­மான கொள்கைப் பிடிப்­புடன் கூடிய வலிமை இல்­லையேல் தமது அர­சியல் இலக்கை அவர்கள் நெருங்­கக்­கூட முடி­யாமல்  போய்­விடும்.

அது மட்­டு­மல்ல, கடும்­போக்­குடன் தில்­லு­முல்லு அர­சியல் தமிழ் மக்­களின் நியா­ய­மான அர­சியல் அபி­லா­ஷை­களை நீர்த்துப் போகச் செய்­வ­தற்­காகக் காலம் கடத்தி காரி­யங்­களைத் திசை திருப்­பு­கின்ற உத்­தி­களை வெற்­றி­க­ர­மாகக் கையாள்­ப­வர்­களின் முன்னால் கைகட்டி வாய்­பொத்தி நிற்­கின்ற நிலை­மைக்கே ஆளாக நேரிடும்.

அர­சியல் தீர்வை எட்­டவும் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணவும் வழி­ச­மைக்கும் என்ற நம்­பிக்­கையை உரு­வாக்­கிய நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­டம்­கூட தமது அர­சியல் அபி­லா­ஷை­களை நிறை­வேற்றிக்கொள்ள முடி­யாமல் தவித்து நிற்­கின்ற தமிழ்த்­த­ரப்பு தங்­க­ளுக்குள் ஒன்­று­ப­டாத நிலையில் எவ்­வாறு நிலை­மை­களை எதிர்­கொண்டு மேலெழ முடியும் என்று தெரியவில்லை.

ஒத்த கொள்கையுடைய தமிழ் அரசியல்கட்சிகளின் நிலைமை இவ்வாறிருக்க, காலத்துக்கு ஏற்ற அரசியல் தலைமை இல்லையே என்ற ஏக்கத்தில் ஆழ்ந்துள்ள தமிழ் மக்கள் எந்த வழியைக் கையாள்வது, யாருடைய தலைமையை ஏற்றுச் செயற்படுவது என்று தெரியாமல் திகைத்து நிற்பது இந்த ஜனாதிபதித் தேர்தலின் மூன்றாவது நிலைப்பாடாகும்.

ஒத்த கொள்கையுடையவர்களாக அறிக்கைகளிலும் மேடைப் பேச்சுக்களிலும் அரசியல் வீரம் காட்டுகின்ற தமிழ் அரசியல்வாதிகள்   தங்களுடைய பிரச்சினைகள் குறித்தும் தங்களுடைய நிலைமைகள் குறித்தும் கவனம் செலுத்துகின்றார்களில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கவலை கொண்டிருக்கின்றார்கள். பிரச்சினைகளையும் நெருக்கடியான அரசியல் நிலைமைகளையும் தமிழ் அரசியல் தலைவர்கள் சாதுரியமாகக் கையாள முடியாதவர்களாக இருக்கின்றார்களே என்று தமிழ் மக்கள் ஏக்கம் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த மக்களின் மனங்களையும் அரசியல் ரீதியான அவர்களின் தாகங்களையும் சரியாகப் புரிந்துகொண்டு தமிழ் அரசியல் கட்சிகள் காரியங்களை முன்னெடுப்பதற்கு முன்வரவேண்டியது அவசியம். இந்த வகையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முயற்சியில் ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்திருப்பது வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். இந்த நகர்வு தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கே இந்த ஜனாதிபதி தேர்தலில் பெரிதும் கைகொடுக்கும்.

என்றாலும் இந்த ஒன்றிணைவு ஜனாதிபதித் தேர்தலுடன் கைவிட்டுப் போய்விடக்கூடாது. அடுத்து வரவுள்ள முக்கியமான பொதுத் தேர்தலையும் வலிமையாகவும் இராஜதந்திரத் தன்மையுடனும் எதிர்கொள்வதற்குரிய வலுவான சக்தியாகப் பரிணமிக்க வேண்டும். அது ஐந்து கட்சிகள் கொண்ட கூட்டிணைவு என்ற எல்லையை விரிவுபடுத்திய ஓர் இணைவாக அமைய வேண்டியதும் அவசியம்.

பி.மாணிக்கவாசகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குறணை கிராமமும் பொது மக்களின் சவால்களும்

2024-03-29 16:46:00
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48