ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும்  விசேட அதிரடி படைகளின் பாதுபாப்புடன் கொழும்பில்  உள்ள உத்தியோகபூர்வ அரசவாசஸ்தலத்தை அவருக்கு வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஓய்வு பெற்ற பின்னர் கொழும்பு 07, மகாகமசேகர மாவத்தையில் உள்ள அனைத்து வசதிகளும் கொண்ட அவர் தற்போது வசிக்கும் இல்லத்தை அவருக்கே வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

ஜனாதிபதியின் தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

போதைப்பொருளை இலங்கையில் ஒழிப்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கிய பங்கு வகித்துள்ளார் என்று தெரிவித்தே குறித்த வாசஸ்தலம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.