(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்து மஹிந்த ராஜ­பக்ஷவிடம் சர­ண­டைந்­தன் மூலம் எதிர்­கா­லத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி இல்­லா­மல்­போகும் அபாயம் ஏற்­பட்­டுள்­ளது என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அஸாத் சாலி தெரி­வித்தார்.

தேசிய ஐக்­கிய முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு தீர்­மா­னித்­தி­ருக்­கின்­றது. ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தேர்­தலில் நடு­நிலை வகிப்­ப­தாக அறி­வித்­தி­ருக்­கின்றார்.

ஏனெனில் ஊழல் மோச­டிக்­கா­ரர்­க­ளுக்கு தான் ஒரு­போதும் ஆத­ர­வ­ளிக்­கப்­போ­வ­தில்லை என தெரி­வித்­து­வரும் ஜனா­தி­ப­திக்கு கோத்­தபாய ராஜ­பக் ஷக்கு ஆத­ர­வ­ளிக்க முடி­யாது. ஆனால் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு அவரின் ஆத­ரவு இருப்­பது அவர் அண்­மையில் தெரி­வித்­தி­ருந்த கருத்தின் மூலம் தெரிந்­து­கொள்­ளலாம்.

இந்த அர­சாங்­கத்­திலும் கடந்த அர­சாங்­கத்­திலும் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ச­வைப்போல் அர்ப்­ப­ணிப்­புடன் மற்றும் நேர்­மை­யாக சேவை செய்­யக்­கூ­டிய அர­சி­யல்­வா­திகள் யாரும் இல்லை என பகி­ரங்­க­மாக தெரி­வித்­தி­ருந்தார். ஆனால் அவ்­வா­றா­ன­வர்கள் இல்­லாத  பொது­ஜன பெர­மு­ன­வுக்கு இன்று ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி ஆத­ர­வ­ளிக்க தீர்­மா­னித்­தி­ருக்­கின்­றது. இவர்­களின் இந்த தீர்­மானம் மூலம் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கு இருந்­து­வந்த வாக்­கு­வங்­கியும் இல்­லா­மல்­போ­யுள்­ளது. கட்சி ஆத­ர­வா­ளர்­களும் காட்­டிக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்கள் கோத்­தபாய ராஜ­பக் ஷவின் தேர்தல் மேடை­களில் ஏறும்­போது அவர்­க­ளுக்கு எதி­ராக பொது­ஜன பெர­முன ஆத­ர­வா­ளர்கள் கூச்­ச­லி­டு­கின்­றனர். அதனால் அவர்­களின் மேடை­களில் ஏறு­வ­தற்கு முடி­யாத நிலை சுதந்­திர கட்­சிக்கு ஏற்­பட்­டுள்­ளது. கடந்த காலங்­களில் இன­வாதம் அடிப்­ப­டை­வாதம் பேசிய அனை­வரும் இன்று ஒரு அணியில் இருக்­கின்­றனர். ரத்­ன தேரர், ஹிஸ்­புல்லாஹ், சிலோன் தெளஹீத் ஜமாத்­தைச்­சேர்ந்த அப்துர் ராஸிக் ஆகியோர் கோத்­தபாய ராஜ­பக் ஷ­வுக்கு ஆத­ர­வ­ளித்து வரு­கின்­றனர். ஹிஸ்­புல்­லாஹ்வின் ஆத­ரவு கோத்­தபாய ராஜ­பக் ஷ­வுக்­குத்தான் என்­பதை எஸ்.பி. திஸா­நா­யக்க பகி­ரங்­க­மாக தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

அதே­நேரம் ஹிஸ்­புல்­லாஹ் மற்றும் அப்­பதுல் ராஸிக் எமக்கு ஆத­ர­வ­ளிக்­க­வில்லை என கோத்தபாய ராஜ­பக் ஷவின் ஊடக பேச்சாளர் டலஸ் அழகப்பெரும அதனை மறுத்திருக்கின்றார். என்றாலும் இவர்கள் அனைவரும் ஒரு அணியில் இருப்பதன் மூலம் கடந்த காலங்களில் நாட்டில் இனவாத, அடிப்படைவாத பிரச்சினையை ஏற்படுத்தி வந்தவர்கள் யார் என்பதை அறிந்துகொள்ளலாம் என்றார்.