எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் உயர்ந்தபட்ச பாதுகாப்பை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பரிந்துரை செய்துள்ளார்.

நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில்  ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தின்போதே  இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. 

அதற்கமைய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் கோரப்படும் வகையில் அவர்களுக்கு தேவையான உயர்ந்தபட்ச பாதுகாப்பினை வழங்குமாறு ஜனாதிபதி பாதுகாப்பு துறை பிரதானிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 35  வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.