சிறையிலிருந்து தப்பிய  இளைஞன் இரு வாரங்களின் பின் கைது

Published By: Digital Desk 4

16 Oct, 2019 | 11:18 AM
image

ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது , அங்கிருந்து தப்பி சென்ற இளைஞன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் தொடர்பில் யாழ்ப்பாண பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்டையில்  குறித்த இளைஞனை கைது செய்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி ஹெரோயின் போதை பொருளை தமது உடமையில் வைத்திருந்தார் எனும் குற்றசாட்டில் ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 

பொலிஸ் நிலைய சிறைக்கூட கதவின் பூட்டினை சரியாக பொலிசார் பூட்டததால் , அதனை திறந்து குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி சென்று தலைமறைவானார். 

குறித்த சம்பவத்தை அடுத்து ரிசேர்வ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். 

தப்பி சென்ற நபரை கடந்த இரு வார காலத்திற்கு மேலாக பொலிசார் தேடி வந்த நிலையில் நேற்றைய தினம் பொலிசார் கைது செய்தனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59