சீயான் விக்ரம் நடிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராக இருக்கும் ‘விக்ரம் 58’ என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்க கன்னட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஒப்பந்தமாகியிருக்கிறார்.

‘கடாரம் கொண்டான்’ என்ற படத்தை தொடர்ந்து நடிகர் சீயான் விக்ரம், டிமான்டி காலனி, இமைக்காநொடிகள் ஆகிய படத்தை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகும் ‘விக்ரம் 58” என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கிறார்.

இந்தப்படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக கன்னட பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் கன்னடத்தில் தயாராகி, தமிழில் வெளியான ‘கே. ஜி. எஃப்’ என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் திரைப்படம் இது. இந்த படத்தில் முன்னாள் இந்திய துடுப்பாட்ட வீரரும், வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதனிடையே நடிகர் சீயான் விக்ரம், மகாவீர் கர்ணா என்ற பிரம்மாண்ட பட்ஜட் படத்திலும், மணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.