(எம்.எப்.எம்.பஸீர்)

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் விஷேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.  

அதன்படி  ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பில்  உரிய அதிகாரிகளுடன் இணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து தேவையான நடவடிக்கையினை முன்னெடுக்க என  பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

பிரதிப் பொலிஸ் மா அதிபர்  கே.பி.எம். குணரத்னவை இது தொடர்பில் நியமித்துள்ளதாகவும் அது தொடர்பில் செயற்பட விஷேட நடவடிக்கை பிரிவொன்றினையும் ஸ்தாபித்துள்ளதாகவும்  பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்திஒயட்சர் ருவன் குணசேகர கூறினார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.பி.எம். குணரத்னவின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நடவடிக்கை பிரிவுடன் 0112697923 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ, அல்லது 011 2697886 எனும் தொலை நகல் இலக்கத்துடனோ வேட்பாளர்கள் பாதுகாப்பு தொடர்பிலான விடயங்கள் குறித்து முறைப்பாடுகள், தகவல்களை வழங்க முடியும்.

மேலும் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டங்களால் குறித்த பகுதிகளில் ஏற்படும் வாகன நெரிசல்கள் மற்றும் பொது மக்கள் அசெளகரியங்களை குறைக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.எம்.எம். விக்ரமசிங்கவின் கீழ் விஷேட நடவடிக்கைப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து 0112473402 அல்லது 0113024894 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ, 0112439534 என்ற தொலை நகல் இலக்கம் ஊடாகவோ தொடர்பு கொண்டு முறைப்பாடு, தவல்களை வழங்க முடியும்.