கடந்த 7ம் திகதி நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நூற்றி தோட்ட தேயிலை தொழிற்சாலையில் இருந்து 67 மூடை தேயிலை களவு போன நிலையில் நோர்வூட் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அதே தோட்டத்தில் தேயிலை தொழிற்சாலை அருகில் உள்ள தோட்டத்துக்கு உரித்தான  வர்த்தக நிலையத்திலிருந்து கைப்பற்றியுள்ளனர். 

இவ்வாறு கைப்பற்றப்பட்ட தேயிலை சுமார் 3000 கிலோ கிராம் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் இது குறித்து தோட்ட முகாமையாளர் நோர்வூட் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை தொடர்ந்து சுற்றிவளைப்பை மேற்nகொண்டு குறித்த கடையிலிருந்த 67 தேயிலை மூடைகளை கைப்பற்றினர்.அத்துடன் கடை உரிமையாளரையும் கைது செய்தனர். 

மேலும் தேயிலை தொழிற்சாலையில் பணியில் இருந்த உத்தியோகஸ்தர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

குறிப்பிட்ட தேயிலை பெறுமதிமிக்கது எனவும் தற்போதைய விலையின்படி கிலோ ஒன்று 600 முதல் 900 ரூபா வரை விற்பனையில் உள்ளது என தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு அந்த வர்த்தக நிலையத்தை தனியாருக்கு வழங்காமல் தோட்ட நிர்வாகம் பொறுபேற்று தொழிலாளிக்கேன கூட்டுறவு சங்கமொன்றை அமைத்து தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.