(நா.தனுஜா)

நாட்டின் நெடுங்காலமாக ஜனநாயகத்தின் அடையாளமாகத் திகழ்ந்துவந்த ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியை முற்றாக அழித்து, குடும்ப ஆட்சியை மேலோங்கச் செய்வதற்கு சிலர் முயற்சிக்கின்றார்கள். எனினும் சுதந்திரக் கட்சியை உண்மையில் கட்சியை நேசிப்பவர்களும், சுயகௌரவம் இருப்பவர்களும் எமது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் மேலும் பலர் எம்மோடு இணைந்துகொள்வார்கள் என்று பொதுநிர்வாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்டவற்றின் பிரதேச, நகரசபை உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள், பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள் 44 பேர் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்து  உத்தியோகபூர்வமாக அவருடன் இணைந்துகொண்டனர்.

இதுகுறித்து தெளிவுபடுத்தும் வகையில் இன்று கொழும்பிலுள்ள புதிய நகர மண்டபத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அங்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.