நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வடக்கு, தெற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய பகுதிகளிலும் மழை பொழியும் சாத்தியகூறு காணப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளது. 

அத்துடன் கிழக்கில் நண்பகல் 2 மணியளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் தெரிவித்துள்ளது.