பகுதி - 1  " ஜப்பான் - சீன உறவுகளின் சகாப்தமும் அமெரிக்க - சீன போட்டியும் "

(ஆர்.ராம்)

நான்காவதாக, மக்களுடைய நிலைப்பாடுகள், இந்தவிடயத்தில் யப்பான் தொடர்பில் சீன மக்களின் நிலைப்பாடு உயர்ந்த மட்டத்திலேயே உள்ளது. இதற்கு நல்ல உதாரணமாக அமைவது, கடந்த ஆண்டு 8மில்லியன் சீன சுற்றுலாப்பயணிகள் யப்பானுக்கு வருகை தந்திருக்கின்றார்கள். சீன மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் சீன சுற்றுலாப்பயணிகளின் வருகை அம்மக்களிடையே யப்பானின் அடையாளத்தினை உயர்த்தியுள்ளது. 

அதேபோன்று யப்பானின் கீழ் மட்ட மக்களும் சீனா மீது அபிமானத்தினைக் கொண்டிருக்கின்றார்கள். இருப்பினும் சீனாவினால் விரும்பத்தகாத முறையில் கப்பல்கள், படகுகளை கிழக்கு சீன கடலில் அனுப்புகின்றபோது தான் யப்பான் மக்கள் குழப்பத்திற்கு உள்ளாகின்றார்கள். அந்தவொரு நிலைமையை விட யப்பான்-சீன உறவுகள் நல்ல மட்டத்திலேயே இருக்கின்றன. 

யப்பான் மக்களின் அபிமானத்தினைக் சீனா கொண்டிருந்தாலும் அதன் படைக்குவிப்பு மற்றும் கிழக்கு சீனக்கடலில் பிரவேசங்கள் தேசிய பாதுகாப்பு, இறைமை தொடர்பான கரிசனைகளை யப்பான் மத்தியில் வெகுவாக மேலெழச் செய்கின்றது. ஆகவே சீனா வெகுஜன இராஜதந்திரத்தினை பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்ற முயலுக்கின்றபோது யப்பான் அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராகவே உள்ளது. 

முதலில் நடவடிக்கையே சீன வெளிவிவகார கொள்கை

சீனாவின் வெளிவிவகாரக்கொள்கையில் எந்தவிடயத்திலும் “முதலில் நடவடிக்கை” என்பது முக்கிய இடத்தினைப் பிடிக்கின்றது. சீன ஜனாதிபி ~P ஜிங் பிங் இந்தோனேசிய பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது, தென்சீனக்கடலில் இராணுவத்தினை பிரவேசிக்கச் செய்து படைகளை வலுப்படுத்த மாட்டோம், நட்புடன் அனைத்து நாடுகளுடனும் இருப்போம், அப்பிரதேசத்தில் நிலையான சமாதனத்தினை உருவாக்குவோம், எண்ணெய்பகுப்பாய்வை வசப்படுத்தமாட்டோம் என்றெல்லாம் உறுதிகளை அளித்தார். ஆனால் தென்சீனக்கடலில் அவ்வாறான எந்த விடயங்களும் இம்பெற்றிருக்கவில்லை. சீனாவின் கருத்துக்களுக்கும், செயற்பாடுகளுக்கும் இடையில் ஏன் இடைவெளி காணப்படுகின்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 

முதலாவதாக அடிப்படையில் நாங்கள் மிகப்பலம்பொருந்திய அதிகாரத்தினைக் கொண்டிருக்கின்றோம். அதனை நாம் ஏன் இழக்க வேண்டும் என்ற மனநிலை சீனாவிடம் காணப்படுகின்றது. இரண்டாவதாக, சர்வதேச நியமங்களை அவர்கள் உள்ளீர்ப்பது கிடையாது. இதனால் பிராந்தியத்தில் உள்ள ஏனைய சிறிய நாடுகள் நெருக்கடிகளுக்கு முகங்கொடுகின்றன. அத்துடன் சீனாவில் உள்ள சில தரப்பினர் கம்னியூஸ்ட் சித்தாத்தின் அதியுச்ச வெளிப்பாடாக நாட்டினுள்ளும், வெளிநாட்டிலும் தமது அதிகாரத்தினை நீட்ட வேண்டும் என்ற மனநிலையில் உள்ளார். இதுவும் சட்ட நியமங்களை மீறுவதற்கான நிலைமையை ஏற்படுத்துகின்றது. 

இதனைவிடவும், வரலாற்றில் தொங்கோ என்ற அரசனின் ஆட்சிகாலத்தில் பிராந்தியத்தில் தனக்கு எதிரானவர்களை, கைதுசெய்து சீனாவின் யுனானன் பிராந்தியத்தில் உள்ள குன்மிங்கில் சிறைவைத்துகின்றார். இவ்வாறான அரசர்களின் பரம்பரை ரீதியான மரபியல் கடத்தல்களும் அதிகாரங்களை பயன்படுத்துவது தொடர்பான சீனர்களின் மனநிலைக்கு காரணமாகின்றது. இதுவே நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்துவதற்கும் காரணமாகின்றது. 

சீனா-அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலத்தில் டொனால்ட் ட்ரெம் மிகக் கடுமையாக சீனாவையும் ஜனாதிபதி ~P ஜிங் பிங்கையும் விமர்சித்தார். பின்னர் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்ததும் தாய்வானுடன் நல்லுறவுகளை பேணுவதற்கு முயற்சிகளைப் செய்து வெற்றியும் கண்டிருந்தார். இந்நிலையில் ட்ரெம்புடன் சுமுக உறவுகளை பேணுவதற்கு 2017ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து சீன ஜனாதிபதி கடும் பிரயத்தனங்களைச் செய்யலானார். 

காரணம், ஐந்தாண்டுகளுக்கு ஒருதடவை நடைபெறும் சீன மக்கள் காங்கிரஸின் மாநாடு 2017ஆம் ஆண்டு நடைபெறுவதற்கான தயார்ப்படுத்தல்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. அதில் தனது அதிகாரங்களை தக்கவைக்க வேண்டிய அவசியம் அவருக்கு இருந்தது. சீனர்களைப் பொறுத்தவரையில் அமெரிக்காவுடனான சுமுகமான உறவுகள் சீனாவின் அனைத்து விடயங்களும் சுமுகமாக நடைபெறுவதற்கு வழிசமைக்கும் என்ற மனநிலையிலேயே உள்ளார்கள். 

அத்துடன் சீனாவின் ஏற்றுமதிகளுக்கான பாரிய சந்தை வாய்ப்பினையும் அமெரிக்கா கொண்டிருக்கின்றது. ஆகவே இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்படும் பட்சத்தில் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படும். அது உள்நாட்டில் வெகுவான தாக்கத்தினை ஏற்படுத்தும். அவ்வாறான தாக்கங்கள் அரசியல் இருப்பினையும் கேள்விகுள்ளாக்கும் என்பதை ~P ஜிங் பிங் உணர்ந்திருந்தார். 

ஆகவே ~P ஜிங் பிங் அமெரிக்காவுடன் நல்லுறவுகளை மேம்படுத்த விளைந்திருந்தார். அதுமட்டுமன்றி சீனாவின் அதிகாரத்தினை விரிவாக்கும் பரப்புரைகள் அமெரிக்காவின் கொள்கை ரீதியான மாற்றத்திற்கு வித்திட்டிருந்தன. 

குறிப்பாக அமெரிக்காவில், வேலை இழப்பு அதிகரித்தமை, பணவீக்கம் ஏற்பட்டமையால் அச்சமான நிலைமையொன்று உள்நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது. இதனால் சீனாவுடனான அனுகுமுறையில் அமெரிக்கா மாற்றங்களை செய்யவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தது. 

கொரியாவின் வகிபாகம்

சீனாவுக்கும் ர~;யாவுக்கும் இடையிலான உறவுகள் வலுவடைந்தபோது அமெரிக்காவுக்கு சந்தேகமான மனநிலையேற்பட்டிருந்தது. பின்னர் அமெரிக்காவுடன் சீனாவுக்கு உறவுகள் மேம்பட்ட நிலையில் தென்கொரியாவுக்கு அமெரிக்கா நட்புக்கரம் நீட்டியிருந்தது. இதனால் வடகொரியா சிக்கலுக்குள் தள்ளப்பட்டிருந்தது. குறிப்பாக 2018ஒலிம்பிக் போட்டிகளின் பின்னரான காலத்தில் வடகொரியா தடுமாறிக்கொண்டிருந்தது. ஆரம்பத்திலிருந்தே அமெரிக்காவின் பிரசன்னம் கொரிய தீவகற்பகத்தினுள் இருக்ககூடாது என்பதே வடகொரியாவின் நிலைப்பாடாக இருந்தது. 

இந்நிலையில் அமெரிக்க, சீன உறவுகள் சிறு முறிவு ஏற்படும் வரையில் பொறுமையாக இருந்த வடகொரியா அவ்வாறான சூழல் ஏற்பட்டதும் அம்முறிவை பெரிதாக்கி கொரிய தீபகற்பத்தினுள் அமெரிக்காவின் பிரசன்னத்தினை தடுக்க முனைந்தது. வடகொரியாவுக்கு சீனா மீதான அச்சமே இவ்வாறான செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு அடிப்படையில் காரணமாக இருந்துள்ளது. 

பிரதிபலிப்பது எப்படி?

அதிகாரத்தினை வலுவாக்குதல், நடவடிக்கைகளை முன்னிலையாக கொண்டிருத்தல் போன்றவற்றில் மாற்றங்களை ஏற்படுத்திருக்கும் சீனாவுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான பிரதிபலிப்புக்களை எவ்வாறு முன்னெடுப்பது என்ற விடயத்தினை கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. இதற்கு யப்பான் சிறந்த உதாரணமாகும்.

‘ஒரேபட்டி ஒரே மண்டலம்’ திட்டத்தில் சீனாவுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு யப்பான் பிரதமர் அபே நான்கு நிபந்தனைகளை விதித்திருந்தார். திறந்த திட்டங்கள், ஊழல்மோசடியற்ற வெளிப்படைத்தன்மை, பொருளாதார நம்பகத்தன்மை, கடற்பொறியற்ற நிலை ஆகியனவற்றை உறுதிசெய்யுமாறு பிரதமர் அபே கோரியபோது சீன அரசு அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டது. தற்போது ‘ஒரேபட்டி ஒரே மண்டலம்’ திட்டத்தில் சீனாவுக்கு அதீத ஒத்துழைப்புக்களை வழங்கும் நாடாக யப்பான் காணப்படுகின்றது. 

மாற்றம்

சீனாவை நாம் மாற்ற முடியாது விட்டாலும் சீனர்களை மாற்றுவதற்கு நாம் முயற்சிக்கலாம். சீனர்கள், அதிகார து~;பிரயோகத்திற்கும், ஊழல்மோசடிகளுக்கும் எதிரானவர்கள். ஆகவே அவர்களின் மனநிலையை புரிந்து சட்டம் ஒழுங்கினை பின்பற்றுவதற்கான சர்வதேச நியமங்களை ஏற்றுக்கொள்வதற்கான அக, புறச் சூழல்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. 

இதற்கு வெகுஜன இராஜதந்திரத்தினை கடைப்பிடிப்பதே ஒரேவழியாகும். வெகுஜன இராஜதந்திரத்தினை சீனர்களிடையே முன்னகர்த்திச் செல்வது என்பது மிகக் கடுமையான பணியாகும். சீனாவுக்கான தொடர்பாடல்கள் வரையறுக்கப்பட்டு பிரத்தியேகமாக உள்ள நிலையில் வெகுஜன இராஜதந்திரத்தினை முன்னெடுப்பது என்பது மிகவும் சிரமமான பணியாகும். சீனர்களுடனான நட்பின் அடிப்படையிலேயே அதனை முன்னெடுக்க முடியும்.

வெகுஜன இராதந்திரத்தின் பால் ஒரே இரவில் சீனாவினை மாற்றிவிட முடியும் என்று கொள்ள முடியாது. படிப்படியான மாற்றங்களை மெதுவான வேகத்திலேயே முன்னெடுக்க முடியும். இதுவே சீனாவின் எதிர்கால மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் வழிசமைக்கும்.

(முற்றும்)