தமிழ்நாட்டில் ஆயுதபயிற்சி- பௌத்த ஆலயங்களை தகர்க்க முயற்சி- பங்களாதேஸ் அமைப்பு குறித்து திடுக்கிடும் தகவல்

Published By: Rajeeban

15 Oct, 2019 | 01:08 PM
image

பங்களாதேசை சேர்ந்த பயங்கரவாத அமைப்பொன்று தமிழ்நாட்டின் கிருஸ்கிரியில் ஆயுதபயிற்சி மற்றும் தாக்குதல் ஒத்திகைகளில் ஈடுபட்டது என இந்தியாவின் தேசிய விசாரணை பணியகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தேசிய  விசாரணை பணியகத்தின் தலைவர் வைசிமோடி இதனை தெரிவித்துள்ளார்.

ஜமாத் உல் முஜாஹீடின் பங்களாதேஸ் என்ற அமைப்பின் நடவடிக்கைகள் குறித்தே அவர்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடியேற்றவாசிகள் என்ற போர்வையில் இந்த அமைப்பினர் இந்தியாவின் தென்மாநிலங்கள் வரை ஊடுருவியுள்ளனர் என அவர் எச்சரித்துள்ளார்.

2014 முதல் 2018 வரை இந்த அமைப்பு பெங்களுரில் பல மறைவிடங்களை உருவாக்க முயன்றதுடன் தென்னிந்தியாவில் கால்பதிக்க முயன்றது என வைசிமோடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் கிருஸ்ணகிரியில் இந்த அமைப்பினர் ரொக்கட் லோஞ்சர் வகை ஆயுதங்களை பரிசோதனை செய்து பார்த்தனர் என குறிப்பிட்டுள்ள இந்தியாவின் தேசிய புலனாய்வு பணியகத்தின் தலைவர் மியன்மாரின் ரொகிங்யா முஸ்லீம்கள் மீதான தாக்குதலிற்கு பழிவாங்குவதற்காக பங்களாதேஸ் அமைப்பினர் இந்தியாவில் பௌத்த ஆலயங்களை தகர்க்க திட்டமிட்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52